பதநீர் ஒரு புத்துணர்ச்சியூட்டும் பானம் மட்டுமல்ல, உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. உடலுக்கு ஊட்டம் அளிப்பதுடன், இயற்கையான ஆற்றலை அதிகரிப்பது வரை பல நன்மைகளைக் கொண்ட ஆரோக்கியமான பானம் ஆகும். பூ பூக்கும் தருணத்தில் பனைமரம், தென்னை, பனை, கித்துல் என மரங்களின் உச்சியில் உருவாகும் குருத்து என்ற விழுதை சரியான முறையில் சீவி, அதில் இருந்து எடுக்கப்படுவது ஆகும்.
பதநீர்
பதநீர் மிகவும் ஆரோக்கியமானது. இனிப்புச் சுவையுடைய இந்த பானம் உடலுக்கு மிகவும் நல்லது. பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் பானத்தில் சிறிது சுண்ணாம்பு சேர்த்தால் அதுவே பனங்கள் எனும் இனிப்பான பானமாகும். கோடைகாலத்தில் பதநீரை தினமும் அளவுடன் குடித்தால் உடலில் உள்ள உஷ்ணத்தை நீக்கி உடல் குளுமையடையும். வாய்ப்புண், குடல் புண்கள் ஆற்றும் குணமுடைய பதநீரை குடித்தால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
பதநீரில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
நார்சத்து நிறைந்தது
கால்சியம் சத்து நிறைந்தது
இரும்புசத்து, துத்தநாகசத்து, வைட்டமின்கள் நிரம்பியது
மேலும் படிக்க | பெண்களின் ஆரோக்கியத்தில் ஆஸ்டியோபோரோசிஸ்! எலும்புப் பிரச்சனைக்கு காரணமும் தீர்வும்
அழகுக்கு பதநீர்
ஆரோக்கியமான நகங்கள், முடி மற்றும் சருமத்தை பராமரிக்க உதவுகிறது. பனை தோலில் உள்ள இரும்பு மற்றும் வைட்டமின் பி, ஆரோக்கியமான தோல், முடி மற்றும் நகங்களை பராமரிக்கும். பல்வேறு உடல் செல்கள் சரியாகச் செயல்படவும் பதநீர் உதவும்.
எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்புத் தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கும் அருமையான இயற்கை பானமான பதநிரீல் போதுமான அளவு கால்சியம் சத்து இருக்கிறது. வெயில் காலங்களில் வரக்கூடிய நீர்க்கடுப்பு, சிறுநீர் வெளியேறும் பாதையில் வரக்கூடிய வலிகளைக் குணப்படுத்தும். ரத்த சோகையை போக்கும் பதநீரில் லாக்டோர்ஸ் எனும் சர்க்கரை சத்து மிகவும் அதிகமாக உள்ளது. இது தவிர கொழுப்பு மற்றும் புரதச்சத்தும் உள்ளது.
மேலும் படிக்க | பஞ்சாமிருத உலர்பழங்கள்! காலை மாலை இரவு எப்ப சாப்பிட்டாலும் டேஸ்ட் + ஹெல்த் கேரண்டி
கார்டியோவாஸ்குலர் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பதநீர்
வைட்டமின் பி சத்து கொண்டுள்ள பதநீர் பித்தத்தை நீக்கி இருதயத்தை வலுவுள்ளதாக ஆக்கும். பதநீரில் உள்ள கால்சியம் சத்து பற்களை பலப்படுத்தும். இதய நோய் அபாயத்தைக் பதநீரை குடிப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. இதய செயலிழப்பு மற்றும் பிற இருதய கோளாறுகளின் அபாயத்தை குறைக்கிறது. பதநீரில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது
தாய்ப்பால் சுரப்புக்கு பதநீர்
பாலூட்டும் பெண்களின் அதிக தாய்ப்பாலை உற்பத்தி செய்யும் திறனை அதிகரிக்கிறது. பாலூட்டும் பெண்களுக்கு தாய்ப்பால் உற்பத்திக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் பதநீரில் உள்ளது.
புற்றுநோயை எதிர்க்கும் பதநீர்
பனை வெல்லத்தில் வைட்டமின் பி2 உள்ளது. வைட்டமின் B2 பொதுவாக ரிபோஃப்ளேவின் என குறிப்பிடப்படுகிறது, இது ஃப்ரீ ரேடிக்கல்கள் எனப்படும் புற்றுநோயை உண்டாக்கும் பொருட்களுக்கு எதிராக உடலின் பாதுகாப்பு வழிமுறைகளை ஆதரிக்கும் ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும்.
மேலும் படிக்க | ஃபுட் பாய்சனா? ஆரோக்கியத்தை கொடுக்கும் உணவே அதை கெடுத்தால்? காரணமும் தீர்வும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ