சினைப்பை நோய்க்குறி (Polycystic ovary syndrome)(PCOS) என்பது பெண்களுக்கு ஆண்ட்ரோஜன் எனப்படும் ஆண்தன்மைச் சுரப்பி அதிகரிப்பதன் காரணமாக ஏற்படும் ஒரு கூட்டு நோய் அறிகுறியாகும்.
ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது மாதவிடாய் இல்லாமலிருத்தல், அதிகமான குருதிப்போக்கு, உடலிலும் முகத்திலும் அதிகமான முடிவளர்ச்சி, முகப்பரு, இடுப்பெலும்பு வலி, மலட்டுத்தன்மை, சில தோல் பகுதிகள் மட்டும் கெட்டியாகவும் கருத்தும் மிருதுவாகக் காணப்படுதல் ஆகியன இதன் அறிகுறிகளாகும். சினைப்பை நோய்க்குறி 18 முதல் 44 வயதுக்குட்பட்ட பெண்களுக்கிடையே தோன்றும்.
சினைப்பை நோய்கள் மரபுவழி, சூழல் என இரண்டும் இணைந்த கூட்டுக்காரணிகளால் ஏற்படுகின்றன. சினைப்பை நோய்க்குறிக்கான தீர்வு எதுவுமில்லை. உடற்பயிற்சி, எடைக்குறைப்பு ஆகிய சில வாழ்க்கைமுறை மாற்றங்கள் இதற்கான சிகிச்சையாகக் கருதப்படுகிறது. கருத்தடை மாத்திரைகள் சில நேரங்களில் சரியான மாதவிடாய் சுழற்சி, மிகை முடிவளர்ச்சி, முகப்பரு ஆகியவற்றின் ஒழுங்கமைப்பை மேம்படுத்த உதவலாம்.
கீழ்க்காண்பவை சினைப்பை நோய்க்குறியின் பொதுவான அறிகுறிகளாகும்.
> ஒழுங்கற்ற மாதவிடாய்
> மலட்டுத்தன்மை
> ஆண் தன்மை மிகுந்து காணப்படுதல்
> வளர்சிதை மாற்ற நோய்க்குறி.