நான் சுத்தமான சைவம் என்றும் கூறுபவர்களை விட நான் சுத்தமான அசைவம் என்ற கூறும் அளவுக்கு அசைவ உணவுகளை விரும்புபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஓய்வு நாளில், விடுமுறை நாளில் மட்டுமே அசைவம் சாப்பிட்டு வந்த நிலை இப்போது மாறிவிட்டது. சைவ உணவகங்களை விட அதிக எண்ணிக்கையில் அசைவ உணவகங்கள் தாம் அதிகம் இயங்குகின்றன.
உடல் உழைப்பு என்பதே இல்லாமல் போய்விட்ட இந்தக் காலகட்டத்தில், அளவிற்கு அதிகமான இறைச்சி உணவு வயிற்றின் செரிமானச் சுமையை அதிகரித்து, கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என்றும் இதனால் அசைவ உணவு சாப்பிடுவதில் கட்டுப்பாடு தேவை என்று மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
சிலருக்கு அசைவ உணவுகளான, அசைவ உணவுகளான சிக்கன், மட்டன், சிவப்பு இறைச்சி போன்றவற்றை தினமும் சாப்பிடும் பழக்கம் உள்ளது. இறைச்சி உடலுக்கு வலுவூட்டுவது மட்டுமின்றி புரதம், இரும்பு, துத்தநாகம், வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சத்தான உணவு என்பதில் சந்தேகமில்லை. மேலும் இவை பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு Health Tips) நன்மை பயக்கும். ஆனால், தினமும் இறைச்சி உண்பவர்கள் இதய நோய், நீரிழிவு, நிமோனியா போன்ற நோய்கள் உட்பட பல கடுமையான நோய்களுக்கு ஆளாகலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதால், வயிற்று புற்றுநோய் அபாயம் அதிகரிக்கிறது என பல முந்தைய ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மற்றோரு ஆய்வு சிவப்பிறைச்சியின் பக்க விளைவுகள் குறித்து எடுத்துரைத்துள்ளது.
மேலும் படிக்க | குழந்தை அறிவாளியாக - ஆரோக்கியமாக பிறக்க... கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டியவை
சிவப்பு இறைச்சி, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, சிக்கன், வான்கோழி போன்ற இறைச்சி வகைகளை வாரத்திற்கு 3 நாட்கள் அல்லது அதற்கு மேல் உட்கொண்டால், அவர்களுக்கு பல வகையான கடுமையான நோய்கள் வரும் அபாயம் அதிகரிக்கும் என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பிஎம்சி மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில், இறைச்சியை அதிகமாக உட்கொள்வதால், பெரும்பாலானோர், மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெறும் அளவிற்கான தீவிர நோய்களுடன் போராடி வருகின்றனர் என்று தெரியவந்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த 4 லட்சத்து 75 ஆயிரம் நடுத்தர வயது மக்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட கால கட்டத்தில், ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் பங்கேற்ற நபர்களின் உணவு மற்றும் மருத்துவ பதிவுகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிகழ்வுகள் மற்றும் இறப்பு சம்பவங்கள் பற்றிய தரவுகளை ஆய்வு செய்தனர்.
இறைச்சி உண்பவர்கள் தொடர்பான ஆய்வு 8 ஆண்டுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் முடிவில், குறைந்த அளவில் இறைச்சியை உட்கொள்பவர்களுடன் ஒப்பிடும்போது, வாரத்திற்கு 3 நாட்கள் அல்லது அதற்கு மேல் இறைச்சியை உட்கொண்டவர்களின் உடல்நிலை மோசமாக உள்ளது கண்டறியப்பட்டது.
உடலுக்குத் தேவையான அளவு மட்டுமே இறைச்சியை உட்கொள்ள வேண்டும். இறைச்சியை கண்மூடித்தனமாக சாப்பிட்டால், ஆரோக்கியம் காலியாகி விடும். ஒரு நாளைக்கு 70 கிராம் பதப்படுத்தப்படாத சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உட்கொள்பவர்களுக்கு இதய நோய்க்கான ஆபத்து 15 சதவீதம் மற்றும் நீரிழிவு நோய்க்கான ஆபத்து 30 சதவீதம் அதிகம் என கூறப்படுகிறது.
பதப்படுத்தப்படாத சிவப்பு இறைச்சி மற்றும் அதிக பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்பவர்களுக்கு இதய நோய், நிமோனியா, பெருங்குடலை பாதிக்கும் நோய் மற்றும் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகம். அதேசமயம், அதிக அளவில் கோழி இறைச்சியை அதிகம் உண்பவர்களுக்கு இரைப்பை - உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய், இரைப்பை அழற்சி, சிறு குடல் வீக்கம், பெருங்குடல் நோய், பித்தப்பை நோய் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவை ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளது.
உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை
உலக சுகாதார அமைப்பும் கூட அதிக அளவு இறைச்சியை உட்கொள்வது, குறிப்பாக சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி ஆகியவை ஆரோக்கியத்திற்கு கடுமையான தீங்கு விளைவிக்கும் என்று பல முறை எச்சரித்துள்ளது.
மேலும் படிக்க | உடல் பருமன் குறைய... குறைந்த கலோரி கொண்ட சில சுவையான சிற்றுண்டிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ