இந்நாட்களில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு என்பது உடலில் இன்சுலின் போதுமான அளவு உற்பத்தி செய்யாதபோது அல்லது அதை சரியாகப் பயன்படுத்த முடியாமல் போகும் ஒரு நோயாகும். உடலின் இரத்தத்தில் அதிக சர்க்கரை இருப்பதால் ஹைப்பர் கிளைசீமியா நிலை ஏற்படுகிறது. உங்கள் உடலால் இன்சுலினை சரியாக உறிஞ்ச முடியாவிட்டால் அல்லது உங்கள் அமைப்பில் போதுமான இன்சுலின் இல்லாவிட்டால் இந்த நிலை ஏற்படுகிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த நீங்கள் இரத்த சர்க்கரை அளவை முடிந்தவரை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
இந்த நிலையில் நீரிழிவு நோயாளிகள் எவ்வளவு தான் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தாலும் சில சமயங்களில் நீரிழிவு நோயாளிகளுக்கு ஹைப்பர் கிளைசீமியா நிலை ஏற்பட்டுவிடும். சாப்பிடாமல் இருக்கும்போது உங்கள் உடலின் இரத்த சர்க்கரை 125 mg/dL (ஒரு டெசிலிட்டருக்கு மில்லிகிராம்கள்) அதிகமாக இருந்தால், உங்களுக்கு ஹைப்பர் கிளைசீமியா உள்ளது என்று அர்த்தம்.
மேலும் படிக்க | கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? வீட்டிலேயே செய்யக்கூடிய சூப்பர் உணவுகள்!
ஹைப்பர் கிளைசீமியாவின் அறிகுறிகள்:
1) அதிக தாகம் மற்றும் உலர்ந்த வாய்.
2) அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
3) உடல் சோர்வு.
4) மங்கலான பார்வை.
5) திடீர் எடை இழப்பு.
6) சிறுநீர்ப்பை நோய்த்தொற்றுகள் மற்றும் தோல் நோய்த்தொற்றுகள்.
உயர் இரத்த சர்க்கரைக்கான காரணங்கள்:
1) மன அழுத்தம்
2) சளி போன்ற வேறு ஏதேனும் நோய்
3) உணவுக்கு இடையில் அதிகமாக ஸ்நாக்ஸ் சாப்பிடுவது.
4) உடற்பயிற்சி செய்யாமல் அல்லது உடல் செயல்பாடு இல்லாமல் இருப்பது.
5) நீரிழப்பு
6) நீரிழிவு மருந்தின் அளவை தவறாக எடுத்துக்கொள்வது
7) அதிகப்படியான சிகிச்சை
8) மற்ற மருந்துகளுடன் கலந்த ஸ்டீராய்டு மருந்துகளை அதிகம் எடுத்துக்கொள்வது.
சர்க்கரை நோய்க்கான தொடக்க அறிகுறியில் இதுவும் ஒன்று. உள்ளங்கை, உள்ளங்கால் போன் றவை மரத்துபோக தொடங்கும். சருமத்தில் அரிப்பு உண்டாகும். சிலருக்கு தேமல் போன்று பூஞ் சைத்தொற்று உண்டாகும். இதில் அரிப்பு ஏற்படும். கை, கால்களில் உணர்ச்சிகள் குறையும். எனவே இந்த அறிகுறிகள் எல்லாமே சர்க்கரை நோய் உங்கள் உடலில் நுழைவாயிலில் நின்றதற்கான அறிகுறிகளே. அதை அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய பரிசோ தனை செய்து கொள்வது நல்லது.
மேலும் படிக்க | கண்ணுக்கு நல்லதுன்னு Vitamin A கண்டபடி சாப்பிடாதீங்க.. பேராபத்து!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ