வயிற்றுப்போக்கு பிரச்சனையால் அவதியா? இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் உதவும்

Home Remedies For Loose Motion: சில இயற்கையான எளிய வழிகளில் வயிற்றுப்போக்குக்கு நிவாரணம் காணலாம். வயிற்றுப்போக்குக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் சில வீட்டு வைத்தியங்கள் பற்றி இங்கே காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 26, 2024, 06:21 PM IST
  • வயிற்றுப்போக்கு எற்பட்டால், பல வகையான காய்கறி மற்றும் பழச்சாறுகளை உட்கொள்ளலாம்.
  • இதில் கேரட் சூப்பும் நல்ல நிவாரணம் அளிக்கும்.
  • இதன் மூலம் செரிமானமும் சீராகும்.
வயிற்றுப்போக்கு பிரச்சனையால் அவதியா? இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் உதவும் title=

Home Remedies For Loose Motion: பல நேரங்களில் நாம் உட்கொள்ளும் சில தவறான மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளால் வயிற்றுப்போக்கு பிரச்சனையை எதிர்கொள்கிறோம். இதனால் அவ்வப்போது கழிப்பறைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படவதோடு உடலில் தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படுகிறது. தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு காரணமாக பலவீனமும் ஏற்படுகின்றது. வயிற்றுபோக்கில் இரு வகைகள் உள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 

ஒன்று 1 அல்லது 2 நாட்கள் நீடிக்கும் கடுமையான வயிற்றுப்போக்கு, மற்றொன்று நாள்பட்ட வயிற்றுப்போக்கு. இது 1 அல்லது 2 நாட்கள் மட்டுமல்லாமல் பல நாட்களுக்கு நீடிக்கும். இரண்டு வகைகளிலும்  சரியான சிகிச்சை அளிக்கப்பட வேண்டியது அவசியமாகும். ஏனெனில் இவை இரண்டுமே ஆபத்தானவை. இதற்கு பல வகையான மருந்துகளை சாப்பிட்டாலும் விரைவில் நிவாரணம் கிடைப்பதில்லை. இவற்றால் சில நேரங்களில் பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. எனினும், சில இயற்லையான எளிய வழிகளிலும் வயிற்றுப்போக்குக்கு நிவாரணம் காணலாம். வயிற்றுப்போக்குக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் சில வீட்டு வைத்தியங்கள் பற்றி இங்கே காணலாம். 

கேரட் சூப்

வயிற்றுப்போக்கு எற்பட்டால், பல வகையான காய்கறி மற்றும் பழச்சாறுகளை உட்கொள்ளலாம். இதில் கேரட் சூப்பும் (Carrot Soup) நல்ல நிவாரணம் அளிக்கும். இதன் மூலம் செரிமானமும் சீராகும். வயிற்றுப்போக்கில் விரைவான நிவாரணம் பெற, ஒரு நாளைக்கு 1 அல்லது 2 முறை சூடான கேரட் சூப் குடிக்கலாம். இதன் மூலம் இரத்த ஓட்டமும் சீராகும். 

பயத்தம் பருப்பு கிச்சடி

வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் பயத்தம் பருப்பால் (Moong Dal) செய்யப்பட்ட கிச்சடியை உட்கொள்ளாலாம். இது வயிற்றுப்போக்குக்கு மிகப்பெரிய நிவாரணத்தை அளிக்கின்றது. வயிற்றுப்போக்கு இருக்கும்போது வழக்கமான உணவு உட்கொள்வதற்கு பதிலாக அரிசி மற்றும் பயத்தம் பருப்பை சேர்த்து செய்யப்படும் கிச்சடியை உட்கொள்ளலாம். இது விரைவில் நிவாரணம் அளிக்கின்றது. 

ஆப்பிள் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகர் (Apple Cider Vinegar) வயிற்றுப்போக்கை நிறுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. 1 டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலக்கவும். அதனுடன் சிறிது தேன் சேர்த்துக் கிளறி ஒரு நாளைக்கு 3 அல்லது 4 முறை குடிக்கவும். இப்படி செய்தால் வயிற்றுப்போக்கில் நிவாரணம் கிடைக்கும்.

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை (Cinnamon) பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த பண்புகள் வயிற்று பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கின்றன. ஒரு கிளாஸ் நீரை கொதிக்க வைத்து அதில் 1 டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் மற்றும் அரை தேக்கரண்டி புதிதாக அரைத்த இஞ்சி சேர்த்து கலக்கவும். 30 நிமிடங்கள் அப்படியே வைத்து பிறகு குடிக்கவும். இதை ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை குடிக்கலாம். 

மேலும் படிக்க | இந்த பழங்களை தோலுடன் சாப்பிட்டு பாருங்க... சுகர் லெவல் சூப்பரா குறையும்

மஞ்சள்

மஞ்சளில் (Turmeric) உள்ள ஆன்டிபயாடிக் பண்புகள் பாக்டீரியாவை எதிர்த்துப் போராட உதவுகின்றன. மஞ்சளில் உள்ள பண்புகள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. வயிற்றுப்போக்கு ஏர்பட்டால் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து குடிக்கவும். இதை ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.

கருவேலம் மரப் பட்டை 

கறுப்பு சீரகத்துடன் கருவேலம் மரப் பட்டை (Babool) இலைகளை சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு குணமாகும். அதுமட்டுமின்றி இம்மரத்தின் பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் கஷாயத்தை  குடிப்பதாலும் நிவாரணம் கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | எடை இழப்பு முதல் செரிமானம் வரை: ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் சோம்பு நீர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News