புதுடெல்லி: கோடையில் நம் உடலுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது, ஏனெனில் வெப்பத்தால் விரைவாக நீரிழப்பு ஏற்படுகிறது. மேலும், அதிக தண்ணீர் குடிப்பதால் நமது செரிமான அமைப்பு பாதிக்கப்படும்.
எனவே, பழங்கள் மற்றும் காய்கறிகள் வயிற்று வலி மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு சிறந்த இயற்கை வைத்தியமாக இருக்கும். காய்கனிகள் உடலுக்கு மிகச்சிறந்த குளிரூட்டியாகும்.
இது உங்கள் உணவில் கூடுதல் கலோரிகளைச் சேர்க்காமல் இயற்கையாகவே உடலில் நீர்ச்சத்தைக் கொடுக்கிறது. கூடுதலாக, இது தாவரங்களில் பிரத்தியேகமாக காணப்படும் முக்கிய சேர்மங்களான பைட்டோநியூட்ரியண்ட்களும் உடலில் அதிகரிக்கிறது.
குறிப்பாக, இந்த இயற்கை முறையிலான உணவு முறை, கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இது உடல் எடையை குறைக்க உதவும் என்று சொல்வதைவிட, உடல் எடை அதிகரிக்காமல் இருக்க உதவும்.
சில காய்கறி மற்றும் பழ சேர்க்கைகள் உங்கள் தனிப்பட்ட உணவு விருப்பங்களுக்கு மிகவும் பொருத்தமானவை.
மேலும் படிக்க | கோடையை சுவையானதாக்கும் ஆரோக்கியமான இந்திய சாலட்கள்
வறுக்கப்பட்ட வெந்தயக்கீரை பனீர் சாலட்
வெந்தயக்கீரையுடன் பனீர் சேர்ந்தால் அது சரியான ஜோடி ஆகும். இதை சாலடாக தயாரித்து உண்பது உடலுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும். இந்த சாலட் பீட்ரூட் டிரஸ்ஸிங்குடன் சுவையாக இருக்கும்.
வெந்தயக்கீரையில் இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. பனீரில் புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்துள்ளதால் உடல் ஆரோக்கியத்தையும், ஊட்டச்சத்தையும் உறுதிபடுத்தும் உணவுக்கலவை இது..
குறைந்த கார்ப் ஹை ஃபேட் (LC-HF) டயட்டில் உள்ளவர்களுக்கு அதிக பனீர் நல்லது. பனீரைத் தவிர, சோயாவின் டோஃபுவும் வெந்தயக்கீரையுடன் சேர்ந்தால் நல்ல ஊட்டச்சத்தைக் கொடுக்கும்.
பனீர் வேண்டாம் என்றால், அதைக் குறைத்து, காய்கறிகளை அதிகமாக சேர்க்கவும், வெந்தயக்கீரையை நன்றாக சுத்தம் செய்தபிறகு, அதிகப்படியான தண்ணீரை வடிகட்டிய பிறகு நறுக்கி தனியாக வைக்கவும்.
மேலும் படிக்க | அடடா பார்லியில் இத்தனை ஊட்டச்சத்து இருக்கா: தெரியாம போச்சா
பனீரை இளஞ்சிவப்பு உப்பு, மிளகுத்தூள் மற்றும் ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து கலந்து வைக்கவும். அது நன்றாக ஊறிய பிறகுக், இருபுறமும் பொன்னிறமாக மாறும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு சிறிய கடாயில், நெய்யை சூடாக்கி, கடுகு, சீரகம், கீல் மற்றும் இளஞ்சிவப்பு உப்பு சேர்க்கவும். துண்டாக்கப்பட்ட மேத்தி இலைகள், நறுக்கிய வெங்காயம், பூசணி விதைகள், எலுமிச்சை சாறு மற்றும் கருப்பு மிளகு சேர்த்து நன்றாக கலக்கவும்.
அதனுடன் பனீர் க்யூப்ஸ் சேர்த்து நன்கு கிளறவும். பீட்ரூட் டிரஸ்ஸிங்: பீட்ரூட்டை நன்றாக அரைத்து சிறிது தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
வறுத்த பார்லியை ஒரு செவ்வக பாத்திரத்தில் பாதியளவு நிரப்பவும்.. மீதி பாதியில் மேத்தி பனீர் சாலட்டை வைக்கவும். அதன் மீது பீட்ரூட் டிரஸ்ஸிங்கை ஊற்றவ கொள்கலன் மையத்தில் வைக்கவும்.
சுவையான அருமையான சாலட் ரெடி. வாய்க்கு ருசியாகவும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கும் சூப்பர் சாலட் இது.
மேலும் படிக்க | தொந்தியையும் கொழுப்பையும் குறைக்கும் உணவுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQ