Food for Health: நமது பாரம்பரிய உணவுமுறைகளில் முக்கிய இடம் பெற்ற ராகி, சில காலங்களுக்கு முன்பு அதிகம் விரும்பப்படாமல் இருந்தது. ஆனால், அதன் ஆரோக்கிய நன்மைகள், அதன் மீதான ஈர்ப்பை மீண்டும் கொண்டுவந்துவிட்டது. உடல்நலம், உடல் பருமன் ஆகியவற்றில் அதிக கவனமாக இருப்பவர்கள், தற்போது மீண்டும் ராகியை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அரிசியுடன் ஒப்பிடுகையில், ராகியின் புரத அளவானது அரிசியை விட இரு மடங்காக உள்ளது. மிகவும் முக்கியமாக இந்தப் புரத தன்மை தனிச்சிறப்புமிக்கதாக இருப்பதை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
அதிக உயிரியல் மதிப்புவாய்ந்த புரதத்தின் முக்கியப் பகுதியான எலோசினின் (eleusinin) உடலோடு எளிதாக கலந்துகொள்ளும் தன்மையுடையது. அதுமட்டுமா, குறிப்பிடத்தக்க அளவில் ட்ரைப்டோபன், கிரிஸ்டைன், மெத்யோனைன் மற்றும் வாசனை மிகு அமினோ அமிலங்கள் ராகியில் முழுமையாக உள்ளன. இவையனைத்தும் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை ஆகும்.
மேலும் படிக்க | வாழைப்பழத்தை சாப்பிட்டா எலும்பு பலமாகுமா?
சைவ உணவில் நல்ல புரதமிக்க உணவாக ராகியில், மெத்யோனைன் புரதம் 5% அளவிற்கு உள்ளது என்பது இதன் சிறப்பு. ராகியில் கொழுப்பு மற்றும் சோடியம் சிறிதளவும் இல்லை. இது தவிர, இதில், நார்ச்சத்து, கால்சியம், புரதம், பொட்டாசியம், இரும்புச்சத்து ஆகியவையும் நிறைந்துள்ளன. இதில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து எடை இழப்புக்கு உதவுகிறது, மலச்சிக்கல் என்ற பெரும் பிரச்சனையை போக்குகிறது.
தாதுப்பொருட்கள் செறிந்த ராகி
தாதுப்பொருட்கள் நிறைந்த தானியமான ராகியில், பிற சிறுதானியங்களில் இருப்பதை விட 5 முதல் 30 மடங்கு கால்சியம் உள்ளது என்பது இதன் சிறப்பை புரிய வைக்க போதுமானது. இதைத் தவிர, பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு போன்ற தாதுப்பொருட்களும் ராகியில் அதிக அளவில் உள்ளன.
எலும்பு உறுதிக்கும் ஆரோக்கியத்திற்கும் கால்சியம் என்பது மிகவும் முக்கியமான தாதுப்பொருளாகும். எனவே ராகி, ஆஸ்டோபேரிஸ் (osteoporosis) அல்லது ஹீமோகுளோபின் அளவு குறைவான அளவில் இருப்பவர்களுக்கு நல்ல பலனளிக்கும் உணவாகும்.
மேலும் படிக்க | மலச்சிக்கலுக்கு குட்பை சொல்லும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு!
ராகி ஒரு சத்துமிக்க காலை உணவு, இதனை தொடர்ந்து காலையில் எடுத்துக் கொண்டு வந்தால், உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, தேகத்தில் தெம்பும் கூடும், அளகு மிளிரும்.
நீரிழிவை கட்டுப்படுத்தும் ராகி
நீரிழிவு நோயைக் கட்டுப்பட்டுத்த, அதிக நார்ச்சத்து மற்றும் ஃபைட்டோகெமிக்கல்ஸ் அடங்கிய ராகி மிகவும் சிறந்தது. அரிசியுடன் ஒப்பிடுகையில் ராகியில் 40 மடங்கு அதிக பாலிஃபினால்கள் உள்ளது. ராகி இரத்த சர்க்கரை அளவு மற்றும் ஹைப்பர் க்ளைசீமிக் மற்றும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு காயம் ஆறும் வேகத்தை அதிகரிக்கும் பண்பையும் ராகி கொண்டுள்ளது என்பது சிறப்பு.
மேலும் படிக்க | ஜாலியா ஒல்லியாகலாம் வாங்க! இந்த ஜூஸ் உடல் எடையை குறைப்பதோடு ஆரோக்கியமானதும் கூட
ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் கொண்ட ராகி
ஆன்ட்டி ஆக்ஸிடன்ட், ராகியில் அதிகமாக நிறைந்துள்ளது. புற்றுநோய் மற்றும் செல்கள் சேதமடைவதால் உண்டாகும் வயதுமுதிர்ச்சி ஆகியவற்றிற்கு காரணமாகும் அதிகப்படியான ஆக்ஸிடேசனை ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் தடுக்கின்றன. ராகியின் மேற்தோலில் உள்ள ஃபினொலிக் அமிலங்கள், ஃப்ளேவேனாய்டுகள் மற்றும் டன்னின்ஸ் ஆகியவை மிகச்சிறப்பான ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் கூறுகளைக் கொண்டுள்ளன.
இளமையாக வைத்திருக்கும் ராகி
கொலாஜன் கிராஸ்-லிங்கிங் எனப்படும் மூலக்கூறு குறுக்கு இணைவை தடுக்கும் பிரத்யேக ஆற்றல் ராகிக்கு உண்டு. இது, தசைநார்கள், தோல் மற்றும் இரத்த நாளங்களில் கொலாஜன் மூலக்கூறுகளுக்கு இடையில் குறுக்கு இணைப்புகள் உருவாகும் செயல்முறையாகும். திசுக்களுக்கு நெகிழ்ச்சித்தன்மையை அளிக்கும் கொலாஜன், திசுக்களை இலகுவாக்கி, இளமையை நீட்டிக்கிறது.
மேலும் படிக்க | ராகியில் இருக்கும் சிறப்பு நன்மைகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ