வாழைப்பழத்தை சாப்பிட்டா எலும்பு பலமாகுமா? ஆம்... நிதர்சனமான உண்மை

Banana For Health: நார்ச்சத்து அதிகம் கொண்ட வாழைப்பழம் குடல் இயக்கம் சீராக இயங்க உதவுகிறது... வாழைப்பழத்திற்கு நிகர் வேறு எந்த பழமும் இல்லை... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 9, 2022, 03:20 PM IST
  • நார்ச்சத்து அதிகம் கொண்ட வாழைப்பழம்
  • குடல் இயக்கம் சீராக இயங்க உதவும் வாழை
  • வாழைப்பழத்திற்கு நிகர் வேறு எந்த பழமும் இல்லை
வாழைப்பழத்தை சாப்பிட்டா எலும்பு பலமாகுமா? ஆம்... நிதர்சனமான உண்மை title=

வாழைப்பழம் சுலபமாக கிடைத்தாலும் இது வித்தியாசமான பழம் ஆகும். வாழைப்பழத்திற்கு நிகர் வேறு எந்த பழமும் இல்லை என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். கொட்டையில்லா இந்த தாவரம், வாழைமரம் என்று அழைக்கப்பட்டாலும், இது மரம் வகையை சார்ந்தது அல்ல என்பதும் உலகின் மிகப்பெரிய மூலிகை என்பதும் ஆச்சரியமான உண்மை ஆகும். உலகில் மிக அதிகமாக பயிரிடப்படும் தாவரங்கள் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது வாழை. சத்தான இந்த பழம் கெத்தானது மட்டுமல்ல, பல்வேறு வகைகளில் கிடைப்பது. வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா?  

வாழைப்பழத்தில் பொதிந்திருக்கும் முக்கியமான ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியமான உடல் மற்றும் மனதுக்கு தேவையானது. பொட்டாசியம் சத்து மிகுந்துள்ள வாழையில், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி6 சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் சோடியம் என பல நுண்ணூட்டச் சத்துக்கள் உள்ளன. 

மேலும் படிக்க | வெந்நீரில் தேன் + எலுமிச்சை கோம்போ யாருக்கு ஆபத்து?

பல்வேறு வகையான பழங்கள் இருந்தாலும் அவை அனைத்துமே ஆரோக்கியத்தை உறுதிசெய்யும் குணத்தில் ஒற்றுமையான பண்புகளை கொண்டவை ஆகும்.

அதிக நார்ச்சத்து உள்ளதால் குடல் இயக்கம் சீராக இருக்க உதவுகிறது. வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற உபாதைகளை தடுக்கும் வாழைப்பழம் பசியை போக்கும் ஒரு மாமருந்து என்றே சொல்லலாம். ஒரு நடுத்தர அளவிலான வாழைப்பழத்தில் நம் உடலுக்கு தினசரி தேவையான நார்ச்சத்து 12 சதவிகிதம் உள்ளது. வாழைப்பழத்தில் உள்ள செரோடோனின் என்ற முக்கியமான ஹார்மோன் வேறு எதிலும் அதிகம் இல்லாதது.

மேலும் படிக்க | வைட்டமின் ஈ சத்துக்கும் சரும அழகுக்கும் இவ்வளவு தொடர்பா? வேர்கடலை செய்யும் மாயம்

இந்த ஹார்மோன், ரத்தத்தில் உள்ள முக்கிய உட் சுரப்பி நீர் ஆகும். மகிழ்ச்சியான மனநிலை மற்றும் உணர்வுகளை சமநிலையில் வைத்திருக்கும் இந்த சத்து, வாழையின் அபூர்வ வரம் என்றே கூறலாம். வாழைப்பழம் போன்ற அமினோ ஆசிட் ட்ரிப்டோபான் அதிகம் உள்ள உணவை உட்கொள்வதன் மூலம் உடலின் செரோடோனின் அளவை மேம்படுத்த முடியும்.

நடுத்தர அளவிலான ஒரு வாழைப்பழத்தில், நம் உடலுக்கு நாள் ஒனொறுக்கு தேவையான கால்சியம் சத்தில் ஒரு சதவிகிதம்தான் உள்ளது. ஆனால், அது நம் உடலில் கால்சியம் சத்தை நன்றாக கிரகித்துக்கொள்ள உதவும் துணை பண்புகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

மேலும் படிக்க | மலச்சிக்கலுக்கு குட்பை சொல்லும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு! நார்ச்சத்தின் புதையல்

ஒரு முக்கியமான அறிவியல் ஆய்வின்படி, வாழைப்பழங்களில் உள்ள சில குறிப்பிட்ட நுண்ணுயிர்கள் குடலில் வாழ்ந்து உடலில் கிரகித்துக்கொள்ள வேண்டிய கால்சியம் சத்தின் அளவை மேம்படுத்துகிறது. வாழைப்பழத்தில் உள்ள அதிக பொட்டாசியம் சத்து நம் எலும்புகளுக்கு நல்லது.

அதிக பொட்டாசியம் சத்துள்ள உணவை உட்கொள்ளும் மக்களுக்கு ஒட்டுமொத்த எலும்பு அடர்த்தி அதிகம் இருக்கும், இது வலுவான எலும்புகளுக்கு வழிவகுத்து ஆஸ்டியோபொரோஸிஸ் போன்ற எலும்பு பாதிப்பினை குறைக்கிறது என்பது ஆய்வுகளின் முடிவில் தெரியவருகிறது.

நோய் எதிர்ப்பு அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு, போதுமான அளவு புரதச்சத்து, அத்தியாவசியமான அமிலங்கள் மற்றும் குறைந்தது 11 வைட்டமின்களும் தாது சத்துகளும் அடங்கியுள்ள வாழைப்பழத்தை தினசரி சாப்பிட்டு, ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்ளலாம்.

மேலும் படிக்க | ஜாலியா ஒல்லியாகலாம் வாங்க! இந்த ஜூஸ் உடல் எடையை குறைப்பதோடு ஆரோக்கியமானதும் கூட

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News