உடல் எடை குறைக்க சுவையான வழி: இதை ட்ரை பண்ணி பாருங்க

Weight Loss by Almonds: உலர் பழங்களை பற்றி பேசுகையில், பாதாம் பருப்பின் பெயர் முதலிடத்தில் உள்ளது. உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான பல ஆரோக்கிய அம்சங்கள் பாதாமில் காணப்படுகின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 24, 2022, 05:40 PM IST
  • ஊறவைத்த பாதாமை சாப்பிட்டால், எளிதில் ஜீரணமாகும்.
  • ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதால் லிபேஸ் என்சைம் வெளியாகிறது.
  • இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
உடல் எடை குறைக்க சுவையான வழி: இதை ட்ரை பண்ணி பாருங்க title=

ஊறவைத்த பாதாமின் நன்மைகள்: உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உலர் பழங்களை சாப்பிடுவது மிக அவசியமாகும். ஏனெனில் நட்ஸ் எனப்படும் உலர் பழங்களில் உடலுக்கு அதிக நன்மை பயக்கக்கூடிய பல கூறுகள் உள்ளன. உலர் பழங்களை பற்றி பேசுகையில், பாதாம் பருப்பின் பெயர் முதலிடத்தில் உள்ளது. உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான பல ஆரோக்கிய அம்சங்கள் பாதாமில் காணப்படுகின்றன. 

பாதாம் பருப்பை எப்படி உட்கொள்ள வேண்டும் என்ற சந்தேகம் மக்களுக்கு எப்போதும் இருக்கிறது. பலர் பாதாமை ஊறவைத்து தோலை நீக்கி சாப்பிடுவார்கள். ஆனால் சிலர் பாதாம் பருப்பை அப்படியே சாப்பிடுவார்கள். இரண்டும் நன்மை பயக்கும் என்றாலும், பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிடுவது அதிக நன்மை தரும் என சுகாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

பாதாம் சத்துக்களின் பொக்கிஷம்

வைட்டமின் ஈ, நார்ச்சத்து, மெக்னீசியம், புரதம், மாங்கனீஸ் போன்ற கூறுகள் பாதாமில் காணப்படுகின்றன. இந்த கூறுகள் அனைத்தும் உடலை அடைந்தால், அது உடலுக்கு நோய்களை எதிர்த்துப் போராடும் சக்தியை அளிக்கின்றது. இதன் காரணமாக அடிக்கடி நோய்வாய்ப்படுவது தவிர்க்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி, ஊறவைத்த பாதாமை சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறைவதோடு, ரத்தத்தில் உள்ள சர்க்கரையும் கட்டுக்குள் இருக்கும்.

மேலும் படிக்க | இனி தேங்காய் மட்டைய தூக்கி போடாதீங்க, அதுல இவ்ளோ சத்து இருக்கு 

பாதாமை ஊறவைப்பது ஆரோக்கியத்திற்கு இந்த நன்மைகளை அளிக்கிறது:

ஜீரணிக்க எளிதானது

ஊறவைத்த பாதாமை சாப்பிட்டால், எளிதில் ஜீரணமாகும். மறுபுறம், பாதாமில் ஆண்டி ஆக்சிடெண்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. அவற்றின் விளைவு ஊறவைத்த பிறகு அதிகரிக்கின்றது. 

ஊறவைத்து சாப்பிடுவதால் பைடிக் அமிலம் வெளியேறும்

பாதாமை ஊற வைக்காமல் சாப்பிட்டால், அதில் உள்ள பைட்டிக் அமிலம் அதிலேயே இருந்து விடுகிறது. ஊறவைக்காத பாதாமில் உள்ள துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்தும் உடலால் சரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. அதனால்தான் பாதாமை எப்போதும் ஊற வைத்து சாப்பிட வேண்டும்.

எடை குறைக்க உதவுகிறது:

ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதால் லிபேஸ் என்சைம் வெளியாகிறது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, இது எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Weight Loss Tips: இந்த 2 காய்கறிகளை சாப்பிட்டால் உடல் எடை குறையும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News