உடல் பருமனுடன் இருக்கும் குழந்தையை இளைக்க வைப்பது எப்படி? ஈசியான டிப்ஸ்!

Weight Loss Tips For Kids : பல குழந்தைகள் உடல் பருமனுடன் இருப்பர். இவர்களை இளைக்க வைக்கும் வழிகளை இங்கு பார்ப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : May 18, 2024, 03:41 PM IST
  • குழந்தைகள் எடை அதிகரிப்பு
  • எடையை குறைப்பது எப்படி?
  • இதோ சில சிம்பிள் டிப்ஸ்!
உடல் பருமனுடன் இருக்கும் குழந்தையை இளைக்க வைப்பது எப்படி? ஈசியான டிப்ஸ்!  title=

Weight Loss Tips For Kids : உடல் பருமனுடன் இருப்பது பெரியவர்கள் முதல் சிரியவர்கள் வரை அனைவரையுமே பிரச்சனையில் தள்ளி விடும். சிறு வயதில், அதிக எடையுடன் இருப்பவர்கள் நாளடைவில் வளர்ந்த பின்பு எடையை குறைந்து விடுவர். ஆனால், சிறு வயதிலேயே அதிக எடையுடன் இருப்பதால் பின்னாளில் பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அது மட்டுமன்றி, சிறு வயதில் உடல் எடை அதிகரித்து வளரும் குழந்தைகள் பலர் தங்களது உடல் குறித்து நெகடிவான பார்வையுடன் வளர்வதாகவும் ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், சிறு வயதில் உடல் பருமனுடன் இருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் சில குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தைகளை சிரமப்படாமல் உடல் எடையை குறைக்க வைப்பது எப்படி? டிப்ஸை படிங்க. 

உடலுக்கு உழைப்பு:

உடற்பயிற்சி செய்வது உடல் எடையை சரியாக பேலன்ஸ் செய்வதற்கும் நீண்ட காலம் எடை ஏறாமலும் பார்த்துக்கொள்ளும். எனவே, குழந்தைகளுக்கு எடையை குறைக்க அவர்களுடன் சேர்ந்து நீங்களும் உடற்பயிற்சி செய்யலாம். சைக்ளிங், ஜாக்கிங், நீச்சல் பயிற்சி, பேஸ்கட் பால், டென்னிஸ் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை நீங்கள் அவர்களுக்கு செய்ய சொல்லி பரிந்துரைக்கலாம். 

டயட்:

குழந்தைகள் என்ன சாப்பிடுகின்றனர், எப்படி சாப்பிடுகின்றனர் என்பதை பெற்றோர்களே தீர்மானிக்கின்றனர். அதனால், அவர்களின் டயட் ப்ளானையும் நீங்களே வகுக்கலாம். உங்கள் குழந்தைகளுக்கு மொத்தமாக ஒரே நேரத்தில் அதிக உணவை கொடுப்பதை விட, குறிப்பிட்ட அளவு உணவை 2 அல்லது 3 மணி நேரத்திற்கு ஒரு முறை மட்டும் கொடுக்கலாம். குழந்தைகளால் டயட்டில் சரிவர இருக்க முடியாது என்ற காரணத்தால் இதை பயன்படுத்தலாம். 

வீட்டில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள்:

குழந்தைகளுக்கு, உணவு பழக்கத்தை வீட்டிலேயே கற்றுக்கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். பெற்றோர்கள், ஹெல்தியான உணவுகளை ஏன் சாப்பிட வேண்டும் என்பதையும் எப்படி சாப்பிட வேண்டும் என்பதையும் சிறு வயதில் இருந்தே பிள்ளைகளுக்கு அவர்களுக்கு புரியும் படி சொல்லிக்கொடுக்க வேண்டும். சாப்பிடும் போது டிவி பார்க்க கூடாது என்பதையும் ஒரு உணவை சாப்பிடும் போது முழு ஈடுபாடுடன் அதை சாப்பிட வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுக்க வேண்டும். கொழுப்பு அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் என்ன ஆகும் என்பதையும் அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

மேலும் படிக்க | உங்கள் குழந்தை படிப்பில் ஆர்வம் காட்டவில்லையா? ’இதை’ செய்யுங்கள்-பிடித்து படிப்பர்

நெகடிவாக பேச வேண்டாம்!

உடல் எடை குறைப்பது என்பது, வயது வந்தவர்களுக்கே மிகவும் கடினமான காரியமாகும். இது, குழந்தைகளுக்கு மிகப்பெரிய காரியமாக தோன்றலாம். ஆரம்பத்தில் உடலில் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழாது. எனவே, அப்பாேது அவர்களிடம் அவர்களது உடல் குறித்து நெகடிவாக பேசாமல் உறுதுணையுடன் இருங்கள். நீங்கள் அவர்களை உடல் எடையை குறைக்க வைக்க வேண்டும் என்பது நல்ல எண்ணமாக இருந்தாலும் அது அவர்களை காயப்படுத்தும் வகையிலோ, கட்டாயப்படுத்தும் வகையிலாே இருக்க கூடாது. 

குழந்தைகள், ஒர கட்டம் வரை மட்டுமே பெற்றோர்களால் வளர்க்கப்படுகின்றனர். அதன் பிறகு அவர்கள் அவர்களின் சூழ்நிலைகளால்தான் வளர்க்கப்படுகின்றனர். எனவே, அவர்களை சுற்றி நல்ல நல்ல தாக்கங்கள் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். அது மட்டுமன்றி, அவர்கள் உடற்பயிற்சி செய்யும் போதோ, டயட்டில் இருக்கும் போதோ நீங்களும் அவர்களுடன் சேர்ந்து இருக்கலாம். இது அவர்களுக்கு இன்னும் டயட் இருக்க ஊக்கப்படுத்தும். 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Parenting Tips: உங்கள் குழந்தைகளை அறிவாளியாக மாற்றுவது எப்படி? சிம்பிள் டிப்ஸ் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News