உப்புல இந்த தப்பு மட்டும் பண்ணிடாதீங்க.... அதிகமானால் ஆபத்து மக்களே!!

Side Effects of Salt: உடலில் உப்பின் அளவு அதிகமானால், அதனால், இரத்த அழுத்தம், வீக்கம், பலவீனம் போன்ற பல நோய்களின் அபாயம் அதிகரிக்கின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 4, 2024, 05:50 PM IST
  • உயர் இரத்த அழுத்தம்.
  • உடலில் வீக்கம்.
  • சோர்வு மற்றும் பலவீனம்.
உப்புல இந்த தப்பு மட்டும் பண்ணிடாதீங்க.... அதிகமானால் ஆபத்து மக்களே!! title=

Side Effects of Salt: 'உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என ஒரு கூற்று உள்ளது. உப்பு நம் உணவின் இன்றியமையாத ஒரு பொருளாக உள்ளது. உணவு எவ்வளவு சுவையாக இருந்தாலும், அதில் உப்பு இல்லையென்றால் அதன் சுவை எடுபடாது. உணவிற்கு அத்தியாவசியமாக இருக்கும் உப்பு அதிகமானால் ஆபத்தைஊயும் விளைவிக்கும். உடலில் உப்பின் அளவில் ஏற்றம் ஏற்பட்டால் அதனால் பல வித பிரச்சனைகள் வரக்கூடும். 

உப்பு (Salt) அதிகமானால், அதனால், இரத்த அழுத்தம், வீக்கம், பலவீனம் போன்ற பல நோய்களின் அபாயம் அதிகரிக்கின்றது. இந்த அறிகுறிகள் தோன்றினால் அவற்றை புறக்கணிக்காமல் உடனடியாக மருத்துவரை சென்று பார்ப்பது நல்லது. இவை தீவிர நோய்களின் அறிகுறிகளாக இருக்கக்கூடும். 

உடலில் உப்பின் அளவு அதிகமானால் தோன்றும் அறிகுறிகள் பற்றி இங்கே காணலாம்:

உயர் இரத்த அழுத்தம்

ஒருவரது உடலில் உப்பின் அளவு அதிகமானால் அது இரத்த அழுத்தத்தை நேரடியாக பாதிக்கிறது. உப்பு அதிகமானால் இரத்த அழுத்தமும் (Blood Pressure) அதிகரிக்கின்றது. இரத்த அழுத்தம் இதய நோயை உண்டாக்கும். வேகமான இதயத் துடிப்பு, தலைவலி, தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகளும் இதில் அடங்கும். இந்த அறிகுறிகள் இருந்தால், உங்கள் உடலில் உப்பின் அளவு அதிகரிக்கின்றது என்பதை புரிந்துகொள்ளுங்கள். 

உடலில் வீக்கம்

உப்பின் அளவு அதிகமாகும்போது, உடலில் நீர் தேங்கி, கை, கால் மற்றும் முகத்தில் வீக்கம் (Inflammation) ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இது அடிக்கடி காலையில் நிகழ்கிறது. காலையில் தூங்கி எழுந்தவுடன் முகம் வீங்கியோ அல்லது ஊதியது போல் தோன்றினால், உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கிறது என அர்த்தம். இதை உடனடியாக கட்டுப்படுத்துவது அவசியமாகும். 

அதிக தாகம்

அதிக உப்பை உட்கொண்டால், அதிக தாகம் (Thirst) எடுக்கும். உப்பை வெளியேற்றும் உடலின் வழி இதுதான். உடலில் உப்பின் சமநிலையை ஏற்படுத்த உடல் இப்படி செய்கிறது. அத்தகைய சூழ்நிலையில், போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது மிக அவசியம்.

மேலும் படிக்க | டம்பெல் தேவையில்லை...தசையை வளர்க்க ‘இந்த’ உடற்பயிற்சிகளை பண்ணுங்க!

சோர்வு மற்றும் பலவீனம்

உடலில் உப்பின் அளவு அதிகமானால், அது உடலில் சோர்வு (Fatigue) மற்றும் பலவீனத்தை ஏற்படுத்தும். ஏனெனில் உப்பின் அளவு அதிகமாவது உடலின் சமநிலையை சீர்குலைக்கும். இதை கவனிப்பது மிகவும் அவசியமாகும். சோடியம் நம் உடலின் தசைகள் மற்றும் எலும்புகளை பலவீனப்படுத்துகிறது. இதன் காரணமாக உடலில் பலவீனமான உணர்வு ஏற்படுகின்றது. 

சிறுநீரின் நிறத்தில் மாற்றம்

உடலில் உப்பின் அளவு அதிகரிப்பதால், சிறுநீரின் நிறத்தில் (Urine Colour) மாற்றம் ஏற்பட்டு அது அடர் நிறத்தில் காணப்படுகின்றது. இதனால் சிறுநீரகம் சேதமடையும் வாய்ப்பும் உள்ளது. சிறுநீரின் நிறம் அடர் நிறமாக, அதாவது அடர் மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் இருந்தால், அது உடலில் உப்பின் அளவு அதிகமாக இருப்பதற்கான அறிகுறியாகும். உப்பின் அளவு அதிகமானால், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உணர்வும் ஏற்பட வாய்ப்புள்ளது. 

தலைவலி

உடலில் உப்பு அதிகமாக இருப்பவர்களுக்கு அவ்வப்போது தலைவலி (Headace) வரும். இவர்களின் உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதால், தலைவலி ஏற்படுகிறது. அடிக்கடி கடுமையான தலைவலி ஏற்பட்டால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகவும்.

உப்பின் அளவை சரியாக வைத்திருப்படு எப்படி?

- உணவில் உப்பின் அளவைக் குறைத்து, உடலுக்குத் தேவையான உப்பை மட்டும் சாப்பிடுங்கள். 
- உப்பின் அளவை சமப்படுத்த, பழச்சாறு மற்றும் காய்கறி சாறு ஆகியவற்றை உட்கொள்ளலாம். 
- தினமும் 1 கிளாஸ் ஜூஸ் குடிப்பது நல்ல பலன் தரும். 
- கலப்படமில்லாத, தரமான உப்பு அல்லது இளஞ்சிவப்பு இந்து உப்பை சாப்பிடுவதும் உடலுக்கு நன்மை பயக்கும். 
- தொடர்ந்து தண்ணீர் குடித்துக்கொண்டே இருப்பது மிக அவசியமாகும். 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஆப்பிள் ஆரோக்கியமான பழம்தான்... ஆனால், இவர்களுக்கு ஆபத்தாகலாம்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News