மைக்ரைன் என்றால் என்ன? ஏன் இந்த நோய் வருகிறது!!

மைக்ரைன் நோய் ஏன் வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு மற்றும் அதற்கான சிகிச்சை என்ன? என்று பார்ப்போம்.

Last Updated : Feb 1, 2018, 05:09 PM IST
மைக்ரைன் என்றால் என்ன? ஏன் இந்த நோய் வருகிறது!! title=

மைக்ரைன் நோயையும் சாதாரண தலைவலியையும் நாம் ஒன்றாகக்குழப்பிக் கொள்கிறோம். அனால் இவை இரண்டும் ஒன்றாகாது. ஒற்றை தலைவலியைத்தான் மைக்ரைன் என்று கூறுவார்கள். மூளையின் ஒரு பகுதுயில் உள்ள ரத்தக் குழாய்கள் குறுக்கமடைவதால் மைக்ரைன் ஏற்படுகிறது. மைக்ரைன் தலைவலி 2 நாட்கள் வரையிலும் நீடிக்கலாம். 

மைக்ரைன் நோய் அறிகுறி:-

மைக்ரைன் நோயை தாக்கப்பட்டவருக்கு தலைவலி மெதுவாக ஆரம்பித்து உக்கிரமடையும், இந்த வலி 2 நாட்களுக்கு நீடிக்கும், சிறிய சப்தம் கூட தலைவலியை அதிகரிக்கும், வாந்தி, குமட்டலும் ஏற்படும். தற்காலிக பார்வை இழப்பு, பேச்சுப் பிரச்சனைகள், உடலில் பலவீனம், உடல் உறுப்புகள் அல்லது கைகால்கள் பாரிச வாயு, வாந்தி, வெளிச்சத்தில் கண் கூசுதல் போன்றவை மைக்ரைன் நோயையினால் ஏற்படும். அறிகுறிகள். இந்த நோயினால் முதலில் பார்வையில் கோளாறு ஏற்படும்.

Image result for Migraines zee

மைக்ரைன் உருவாக காரணம்:-

* மன அழுத்தம்
* தப்ப வெட்ப நிலை
* காப்ஃபைன் எடுத்துக் கொள்ளல்
* அதிக சத்தத்தில் இசை
* அதீத தூக்கம்
* வெறும் வயிறு

Image result for Migraines zee

மைக்ரைன் வராமல் இருக்க:-

அ) டென்ஷன், கோபம், மன இறுக்கம் போன்றவை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஆ) தினமும் யோகா, தியானம் செய்யவேண்டும்.
இ) சூடான நீரை அருந்த வேண்டும்.
ஈ) குளிரூட்டப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

Image result for Migraines zee

Trending News