மூச்சுத்திணறல் ஏற்பட்டால் மரணம் சம்பவிக்குமா? பப்பி லஹரியை பலி வாங்கிய OSA

மூச்சுத் திணறல் ஏற்படுவதை சுலபமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை பிரபல பாடகர் பப்பி லஹரியின் திடீர் மரணம் உணர்த்துகிறது. உறக்கத்திலேயே மூச்சுத்திணறல் ஏற்படும் நோய் குறித்த தகவல்கள்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 16, 2022, 12:16 PM IST
  • மூச்சுத்திணறல் ஏற்பட்டால் மரணம் சம்பவிக்குமா?
  • பப்பி லஹரியை பலி வாங்கிய நோய்
  • உடல் பருமன் உயிருக்கு ஆபத்து
மூச்சுத்திணறல் ஏற்பட்டால் மரணம் சம்பவிக்குமா? பப்பி லஹரியை பலி வாங்கிய OSA title=

பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான பப்பி லஹிரி காலமானார். அவர் உறக்கத்தில் இருந்தபோதே இறந்துவிட்டார். உறக்கத்திலேயே மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். 

பாப்பி டா என்று அழைக்கப்படும் பப்பி லஹரி தமிழிலும் பாடும் வானம் பாடி என்கிற படத்துக்கு இசையமைத்துள்ளார்.  69வது வயதில் மும்பையில் உள்ள கிரிட்டிகேர் மருத்துவமனையில் மரணமடைந்தார். இது என்ன நோய்?

தூக்கத்திலேயே மூச்சுத்திணறல் ஏற்படும் (obstructive sleep apnea) ஒருவகையான நோயால் பப்பி லஹரி உயிரிழந்ததை அடுத்து, இந்த நோய் குறித்து பலராலும் பேசப்படுகிறது.
உண்மையில் obstructive sleep apnea என்றால் என்ன?

movies

தூக்கத்திலும் மூச்சுத் திணறல் ஏற்படும் என்பது பலருக்கு தெரியவில்லை என்பதால் இந்த கட்டுரை அனைவருக்கும் முக்கியமான ஒன்று. தூங்கும் போது சுவாசம் சிறிது நேரம் நின்றுவிடும். இந்த நேரத்தில், உடலுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காது.  

தூக்கத்தில் மூச்சுத்திணறல் (OSA) மிகவும் பொதுவான தூக்கக் கோளாறுகளில் ஒன்றாகும். உறங்கும் போது சுவாசம் சிறிது நேரம் நின்றுவிடும் நிலை இது. அப்போது,, ​​உடலுக்கு முழு ஆக்சிஜன் கிடைக்காமல் போவதால் தூக்கம் கலைந்துவிடும். படபடப்பாக இருக்கும். இது வழக்கமாக ஏற்படும் நிலை ஆகும்.

மேலும் படிக்க | வயிற்று உப்புசம் நீக்கும் ஓமம்; தினமும் சாப்பிடுவதால் என்ன நன்மைகள்

தூக்கத்தில் மூச்சுத்திணறல் (OSA) ஏற்படுவதால் ஏற்படும் ஆபத்து  
உடல் பருமன் தொடர்பான நோய்களான ஹைப்போ தைராய்டிசம் மற்றும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் போன்றவை இந்த நோயை ஏற்படுத்தும்.

இது தவிர, வயது அதிகரிப்பு, உயர் இரத்த அழுத்தம், புகைபிடித்தல், நீரிழிவு நோய், தூக்கத்தில் மூச்சுத்திணறல், ஆஸ்துமா, அதிக எடை, டான்சில்ஸ், சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை, நாக்கு விரிவாக்கம், பக்கவாதம், மற்றும் நரம்புகளைப் பாதிக்கும் நோய்கள் போன்ற நரம்புத்தசை நோய்களும் தூக்கத்தில் மூச்சுத்திணறலை ஏற்படுத்தும், 

மற்றுமொரு கூடுதல் தகவலாக, ஆண்களில் கழுத்து அளவு 17 அங்குலம் அல்லது அதற்கும் அதிகமாகவும், பெண்களில் 16 அங்குலம் அல்லது அதற்கும் அதிகமாகவும் இருந்தால் தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படலாம்.

மேலும் படிக்க | கருமையான அடர்த்தியான கூந்தலுக்கு கேரண்டி சொல்லும் எண்ணெய்

தூக்கத்தில் மூச்சுத்திணறல் (OSA) ஏற்படுவதன் அடையாளம்  

பகலில் அதிகமாக தூக்கம் வருவது
தூங்கும்போது சத்தமாக குறட்டை விடுவது
உயர் இரத்த அழுத்தம்
தூங்கும்போது மூச்சுத்திணறல் அல்லது மூச்சுத் திணறலால் திடீர் விழிப்பு  
உறக்கத்திலேயே வாய் வறண்டு போய் திடீரென்று எழுந்திருப்பது அல்லது தொண்டை வலிப்பது  
காலையில் எழுந்தவுடன் தலைவலி
பகலில் கவனம் செலுத்துவதில் சிரமம்
மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள் 

மேலும் படிக்க | நீரிழிவு நோய்க்கு அதிமருந்தான வெந்தயத்தின் அற்புத நன்மைகள்

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தூக்கத்தில் மூச்சுத்திணறல் அதிக எடை காரணமாக ஏற்படுகிறது.  தூக்கத்தில் மூச்சுத்திணறல் (OSA) நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடற்பயிற்சி செய்வது மற்றும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். எடை குறைந்தவுடன், தூக்கத்தில் மூச்சுத்திணறல் அறிகுறிகள் மறைந்து போய்விடும் அல்லது குறைய ஆரம்பிக்கும்.

பல நோய்களுக்கு காரணமாக இருக்கலாம்
இது தவிர, ஏற்கனவே தூக்கத்தில் மூச்சுத்திணறல் (OSA) நோய்க்கு சிகிச்சை பெற்று, நடுவில் விட்டுவிட்டீர்கள் என்றால், அவ்வாறு செய்வது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.

OSA சிகிச்சையை இடையில் நிறுத்திவிட்டால், பக்கவாதம், தலைவலி, உயர் இரத்த அழுத்தம், இதய செயலிழப்பு, நீரிழிவு, மனச்சோர்வு என பல் நோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

பரிகாரம் என்ன?
தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஒரு தீவிர நோய் ஆகும். இந்த நோய் தொடர்பான அறிகுறிகள் ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுகி, மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமானது.  

மேலும் படிக்க | லதா மங்கேஷ்கரின் கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துக்கு வாரிசு யார்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News