தயிர் நல்லதுதான், ஆனால்..... இந்த பிரச்சனை இருந்தால் கண்டிப்பா சாப்பிடாதீங்க

Side Effects of Curd: தயிரில் நன்மைகள் மட்டுமல்ல, சில தீமைகளும் உள்ளன. இவற்றை பற்றிய விவரங்களை கருத்தில் கொண்டு தயிரை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 28, 2024, 02:32 PM IST
  • தயிர் குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
  • எனினும், வாயுத்தொல்லைய, மலச்சிக்கல், வீக்கம் போன்ற செரிமான பிரச்சனைகள் இருந்தால், தயிரை உட்கொள்ள வேண்டாம்.
  • இது செரிமானத்தை மந்தமாக்கி பிரச்சனையை மேலும் தீவிரமாக்க வாய்ப்புகள் உள்ளன.
தயிர் நல்லதுதான், ஆனால்..... இந்த பிரச்சனை இருந்தால் கண்டிப்பா சாப்பிடாதீங்க

Side Effects of Curd: தயிர் பாலிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு உணவுப் பொருள். தயிரில் புரதச்சத்து, கால்சியம், வைட்டமின் பி6, வைட்டமின் பி12 போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும். குறிப்பாக தயிர் செரிமானத்திற்கு மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. இதில் அதில அளவு புரோபயாடிக்குகள் இருப்பதே இதற்கு காரணமாகும். தயிரில் உள்ள பொரோபாடிக்குகள் குடலில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியாவை அதிகரிக்கின்றன.

Add Zee News as a Preferred Source

ஆனால், தயிரில் நன்மைகள் மட்டுமல்ல, சில தீமைகளும் உள்ளன. இவற்றை பற்றிய விவரங்களை கருத்தில் கொண்டு தயிரை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக இந்த 4 உடல்நலப் பிரச்சனைகளைக் கொண்டுள்ளவர்கள், தயிரைக் குறைவாக பயன்படுத்துவது அல்லது முற்றிலுமாக தவிர்ப்பதும் நல்லது. 

கீல்வாதம் (Arthritis)
 

மூட்டுவலி உள்ள நோயாளிகள் தயிர் சாப்பிடக்கூடாது. தயிரில் எலும்புகளுக்கு தேவையான கால்சியம் இருந்தாலும், கீல்வாத பிரச்சனை இருப்பவர்களுக்கு இது மூட்டு வலியை அதிகரிக்கும். எனினும் இவர்கள் தயிருக்கு பதிலாக மோர் உட்கொள்ளலாம்.

ஆஸ்துமா (Asthma) 

ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் உணவில் தயிரை சேர்க்கவே கூடாது. ஏனெனில் பால் உணவுகள் ஆஸ்துமா அடாக்கை தூண்டக்கூடும். ஆகையால், இவற்றை தவிர்ப்பது நல்லது.

மேலும் படிக்க | எடை இழப்பு முதல் செரிமானம் வரை: வெள்ளரிக்காய் அளிக்கும் நன்மைகளின் லிஸ்ட் இதோ

லுகோரோயா (Leukorrhea)

லுகோரோயா, அதாவது அதிகமான வெள்ளைப் படுதல் பிரச்சனை இருப்பவர்கள் தயிர் சாப்பிட வேண்டாம். தயிர் உட்கொள்வதால், பிரச்சனை மேலும் தீவிரமடையலாம்.

அதிக கொழுப்பு (High Cholesterol)

அதிக கொலஸ்ட்ரால் இருந்தால், முழு கொழுப்புள்ள தயிர் சாப்பிடுவது அதன் அளவை மேலும் அதிகரிக்கலாம். இருப்பினும், தயிருக்கு பதிலாக மோர் உட்கொள்ளலாம்.

மலச்சிக்கல் (Constipation)

தயிர் குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும், வாயுத்தொல்லைய, மலச்சிக்கல், வீக்கம் போன்ற செரிமான பிரச்சனைகள் இருந்தால், தயிரை உட்கொள்ள வேண்டாம். இது செரிமானத்தை மந்தமாக்கி பிரச்சனையை மேலும் தீவிரமாக்க வாய்ப்புகள் உள்ளன. 

தயிர் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்:- கால்சியம் சத்து நிறைந்த தயிரை தினமும் சாப்பிட்டு வந்தால், மூட்டு வலி பிரச்சனையில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
- கால்சியம் சத்து நிறைந்த தயிரை தினமும் சாப்பிட்டு வந்தால், மூட்டு வலி பிரச்சனையில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
- தயிரில் உள்ள கூறுகள் உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும்.
- தயிரில் ஏராளமாக உள்ள வைட்டமின் சி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
- தினமும் தயிர் சாப்பிடுவதால், சரும செல்கள் ஆரோக்கியமாகி, சருமம் பளபளப்பாகும்.
- தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் சமநிலையை பராமரிக்க உதவுகின்றன. 
- இது செரிமான செயல்முறையை ஆரோக்கியமாக வைத்து மலச்சிக்கல் மற்றும் வாயுத்தொல்லை போன்ற பிரச்சனைகளை போக்குகிறது.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நீரிழிவு நோய் அதிகமானால் உடலில் தோன்றும் அறிகுறிகள் இவைதான்: அலட்சியம் வேண்டாம்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News