இன்று பிப்ரவரி 4, உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோயைப் பொறுத்தவரை, நம்மில் பலருக்கு அடிப்படை கவனிப்பு கிடைப்பதில்லை, ஆனால் புற்றுநோயைத் தடுப்பது, கண்டறிதல் மற்றும் சிகிச்சையில் பிரமிக்க வைக்கும் அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது நோய்களை குணப்படுத்துவது, சரியான நேரத்தில் கண்டறிந்தால் சிக்கல் இல்லை சிகிச்சை உண்டு என்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
ஆனால், துரதிருஷ்டவசமாக, மருத்துவத்துறையில் உள்ள முன்னேற்றமும், விழிப்புணர்வு மற்றும் சிகிச்சைகளின் மூலம் புற்றுநோயை குணப்படுத்திவிடலாம் என்ற தெளிவும் பொதுவாக அனைவருக்கும் இருப்பதில்லை. மாறிவரும் காலச்சூழலில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், விழிப்புணவும், சுய கவனிப்பும் அவசியம் என்பதை ஊக்குவிக்கும் விதமாக உலக புற்றுநோய் தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | Bone Health: வயசானாலும் இளமையாக இருக்க உதவும் உணவுகள்! இத்தனை நாளா தெரியாம போச்சே!
அதுமட்டுமல்ல, புற்றுநோய் சிகிச்சையை நாடுபவர்களுக்கு ஒவ்வொரு இடத்திலும் பல தடைகளையும், சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நோய் யாருக்கு வேண்டுமானாலும் பாதிக்கலாம். ஆனால், வருமானம், கல்வி, புவியியல் இருப்பிடம் மற்றும் இனம், மதம், பாலினம், பாலியல் நோக்குநிலை, வயது, இயலாமை மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு ஆகியவை புற்றுநோய் தொடர்பான கவனிப்பை எதிர்மறையாக பாதிக்கும் சில காரணிகளாக இருக்கிறது.
புகையிலை, ஆரோக்கியமற்ற உணவு அல்லது சுற்றுச்சூழல் அபாயங்கள் என பிற ஆபத்து காரணிகளும் புற்றுநோய் ஏற்படுவது மற்றும் சிகிச்சைக்கு பிரச்சனையாக உருவெடுத்துள்ளன.ளுக்கு அதிக வெளிப்பாடுகளைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அதிலும், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வசிப்பவர்களுக்கு புற்றுநோய் என்பது வாழ்க்கையையே புரட்டி போட்டுவிடுகிறது என்றால், வசதியானவர்களுக்கு, வளர்ந்த நாடுகளிலும் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வும், அதை எதிர்கொள்வதிலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. இதனால் தான், உலக புற்று நோய் தினத்திற்கான கருப்பொருள், 2022 முதல் 2024 வரையில் “close the care gap” என்று வைக்கபப்ட்டுள்ளது.
“close the care gap” என்பதன் பொருளை, உலக புற்று நோய் தினத்துடன் பொருத்திப் பார்த்தால், ‘கவனிப்பு, அக்கறை இடைவெளியை ஒழித்துவிடவும்’ என்று சொல்லலாம். இன்றைய உண்மை நிலை என்னவென்றால், நீங்கள் யார், எங்கு வாழ்கிறீர்கள் என்பது வாழ்வுக்கும் சாவுக்குமான இடையிலான வித்தியாசத்தைக் காட்டுவதாக இருக்கிறது. இது நியாயமானாதா? நியாயமில்லாத இந்த இடைவெளியை நம்மால் மாற்ற முடியும்.
மேலும் படிக்க | ஒரு மாதம் சர்க்கரைக்கு 'நோ' சொல்லுங்க... உங்க உடம்பு எப்படி மாறுது பாருங்க!
அதிலும், கருப்பை மற்றும் மார்பக புற்றுநோய் பெண்களை அதிகம் பாதிக்குக்ம் புற்றுநோய்களில் பிரதானமானவை. இவை இரண்டும், ஆரம்பக்கட்டத்தில் வலியை உண்டாக்காது. மார்பக புற்றுநோய் வளரத் தொடங்கும் போது எந்தவித அடையாளத்தையும் காட்டாது. ஆனால், மாபகப் புற்றுநோய் வளர வளர சில அறிகுறிகள் ஏற்படும். அவை:
மார்பகத்தின் அளவும் வடிவும் மாறுபடுவது
மார்பகப் பகுதி தடித்தோ கனமாகவோ இருப்பது
மார்பகக் காம்பிலிருந்த இரத்தமோ வேறு திரவமோ கசிவது
மார்பகத்தின் தோல், கருப்பு வளையம், முலைக்காம்பு முதலியவற்றின் வண்ணம் மாறும்
ஆரம்ப காலத்தில் கண்டறியப்படும் பெரும்பாலான புற்றுநோய்களை சிகிச்சை மூலம் முழுவதுமாக குணப்படுத்த முடியும், இறப்பு விகிதத்தை தடுக்க முடியும். மேலும் இந்த புற்றுநோய் தினத்தை அனுசரிக்கும் விதமாக, உலகம் முழுவதிலும் பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். ஏழு லட்சம் பேர் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர். மக்களுக்கு புற்று நோய் குறித்த விழிப்பு உணர்வு இல்லாததே, இதற்கு காரணம். உலகளவில் ஏற்படும் இந்த இறப்புகளில் 40 சதவீதத்திற்கும் அதிகமானவை வாழ்க்கை முறை மாற்றங்கள், வழக்கமான சோதனைகள் மற்றும் ஆரம்பகால கண்டறிதல் மற்றும் சிகிச்சையின் மூலம் தடுக்கப்படுகின்றன. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் பரவலாக ஏற்பட்டால், இந்த நோய், நம்மை சோர்ந்து போக வைக்காது.
மேலும் படிக்க | எச்சரிக்கை! பாகற்காயை அளவிற்கு அதிகமாக உட்கொள்ள வேண்டாமே !
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ