இன்று உலக காசநோய் தினம்! காசநோய் பற்றி விழிப்புணர்வு!

மார்ச் 24ம் தேதி உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் “உலக காசநோய் தினம்” கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

Updated: Mar 24, 2019, 02:44 PM IST
இன்று உலக காசநோய் தினம்! காசநோய் பற்றி விழிப்புணர்வு!

மார்ச் 24ம் தேதி உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் “உலக காசநோய் தினம்” கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

காசநோய் என்றால் என்ன? 

இது ஒரு தொற்று நோய். இந்த நோய்க்கு ஆரம்ப நிலையில் நல்ல சிகிச்சை அளிக்காவிடில் மிக அதிக பாதிப்பினை உடலுக்கு ஏற்படுத்தும். இந்த நோய் தாக்கும் பாக்டீரியாவின் பெயர் பையோ பாக்டீரியம் டியூபர்க்ளோஸிஸ் என்பது ஆகும். நுரையீரலிலும், தொண்டையிலும் ஏற்படும் இத்தாக்குதலே அவரது சளி, எச்சில் மூலமாக காற்றில் அடுத்தவரை பாதிக்கச் செய்யும். ஆனால் டிபியின் தாக்குதல் சிறுநீரகம், மூளை, எலும்பு இவற்றிலும் கூட ஏற்படலாம். 

காச நோயின் அறிகுறிகள் என்ன?

* மூன்று வாரத்துக்கு மேல் இருமல்.
* அதிக எடை குறைவு
* பசியின்மை
* அதிக ஜுரம்
* இரவில் வியர்வை
* மிக அதிக சோர்வு
* சக்தியின்மை

காசநோயால் ஏற்படும் பாதிப்புகள்!

* நீரிழிவு நோய், சிறு நீரக நோய் உடையோருக்கு காச நோய் எளிதில் தாக்கலாம்.

* எய்ட்ஸ் பாதிப்பு உடையவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவின் காரணமாக எளிதில் பாதிக்கப்படுவர்.

* புற்று நோய் சிகிச்சை மேற்கொள்பவர்கள் என சில வகை நோய்களை ஏற்கனவே உடையவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதன் காரணமாக காசநோய் பாதிப்பினை பெறலாம்.

* இன்று உலகில் 9 மில்லியன் மக்கள் வருடந்தோறும் காசநோயினால் பாதிக்கப்படு கின்றார்கள் என்று சொல்கின்றது.

* டிபி கிருமி உடலில் இருந்தும் அநேகர் பாதிப்பு வெளிப்பாடு இல்லாமல் இருக்கின்றனர். ஆனால் இந்த பாதிப்பு வெளிப்பாடு எந்நேரத்திலும் நிகழலாம். உலகில் முன்றில் ஒரு பங்கு மக்கள் இப்பாதிப்பிற்கு ஆளாவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

* மற்றொரு வகை டிபி அரிதானது. இவ்வகையில் கிருமி ரத்தத்தின் வழியாக உடலில் பல்வேறு உறுப்புகளை ஒரே நேரத்தில் பாதிக்கும். இவ்வகை மிகவும் அபாயகரமானது.

* சுகாதாரத்தினை கூட்டுவதே மிகப்பெரிய தீர்வினைக் கொடுக்கும்.

* பொது இடங்களில் எச்சில் துப்புவது, மூக்கினை சிந்துவது இவை மிக அநாகரிகமானது மட்டுமல்ல. சுகாதார சீரழிவு என்பதனை இனியாவது மக்கள் உணர வேண்டும்.