போனி புயல் எதிரொலி; இரண்டு பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு!

ஒடிசாவில் போனி புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாநிலத்தின் இரண்டு பல்கலை கழகங்களில் தேர்வுகள் ஒத்திவைகப்பட்டுள்ளது. மேலும் 72 ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது!

Last Updated : May 1, 2019, 04:53 PM IST
போனி புயல் எதிரொலி; இரண்டு பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு! title=

ஒடிசாவில் போனி புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாநிலத்தின் இரண்டு பல்கலை கழகங்களில் தேர்வுகள் ஒத்திவைகப்பட்டுள்ளது. மேலும் 72 ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது!

இலங்கை அருகே தென் கிழக்கு வங்க கடலில் உருவான போனி புயல், திசை மாறி வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. அதி தீவிர புயலாக மாறியுள்ளது. இந்த புயல் சென்னையில் இருந்து வங்க கடலில் 690 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. 

இந்நிலையில், வரும் மே 3-ஆம் தேதி ஒடிசாவில் கோபால் பூருக்கும், சந்தபாலிக்கும் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. போனி புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 205 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதனால், ஒடிசாவின் 5 மாவட்டங்களில் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒடிசா மாநிலத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். புயல் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் சுற்றுலா மேற்கொண்டுள்ள பயணிகளும் வரும் மே 2(நாளை) குள் ஒடிசா-வை விட்டு வெளியேறும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர் 

புயலின் பாதிப்பில் இருந்து பாதுக்காக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 72 ரயில்களின் சேவை தற்போது ரத்து செய்யப்பட்டுளது. மேலும் ரெவெனஷ்வா பல்கலை கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேப்போல் மே 2-ஆம் தேதி துவக்கும் என அறிவிக்கப்பட்ட உட்கல் பல்கலை கழக தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News