கொரோனா வைரஸின் அழிவு உலகிலும் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. சுகாதாரத் துறையின் சமீபத்திய தகவல்களின்படி இதுவரை, இந்த ஆபத்தான வைரஸின் மொத்தம் 21,393 வழக்குகள் இந்தியாவில் பதிவாகியுள்ளன. 4,258 பேர் இந்த நோயால் குணமாகியுள்ளனர். கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், கொரோனா பரவல் வேகம் குறைந்தபாடில்லை.
இந்த தொற்று அதிகரித்து வருவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. பொதுமக்கள் கூடுவதை தடுக்க நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சமுதாய விலகலை கடைபிடிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பள்ளிகலள், கல்லூரிகள், திரையரங்குகள், மால்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன.
இந்நியலையில் ஆந்திராவில் இன்று புதிதாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 893 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இன்று மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திராவில் இதுவரை கொரோனாவுக்கு 27 பேர் உயிரிழந்துள்ளனர்.