டெல்லியில் ஆதார் அடையாள அட்டை இல்லாத பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் நிறுத்தப்பட்டதால் ஆளும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இதனால் அதிருப்தி அடைந்த கெஜ்ரிவால் தலைமைச் செயலாளர் அன்சு பிரகாஷை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனை முடிந்தவுடன், ஆம் ஆத்மி கட்சியின் இரண்டு எம்.எல்.ஏக்கள் தாக்குதல் நடத்தியதாக தலைமைச்செயலாளர் அன்சு பிரகாஷ் புகார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலை சந்தித்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு குற்றம் செய்தவர்களை கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
#WATCH Earlier visuals of the scuffle which broke out at Delhi Secretariat between AAP Minister Imran Hussain's PS Himanshu Singh and unidentified persons pic.twitter.com/cJhnMHypQx
— ANI (@ANI) February 20, 2018
ஆனால், தலைமைச் செயலாளர் அன்சு பிரகாஷ் புகாருக்கு பதிலளித்துள்ள ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாரும் தாக்குதல் நடத்தவில்லை என்று கூறியுள்ளனர்.
மேலும், ஆளுநருக்கு மட்டுமே பதில் கூறுவேன் என தலைமைச்செயலாளர் திமிராக பேசியதால் எம்.எல்.ஏ.க்கள் வாக்குவாதம் மட்டுமே செய்ததாக அக்கட்சி தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி துண்டுதலின் பேரில் கெஜ்ரிவாலுக்கு எதிராக தலைமைச் செயலாளர் செயல்படுவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
Delhi: Chief Secretary Anshu Prakash's complaint letter to Police over yesterday's incident pic.twitter.com/zvdsNGatIN
— ANI (@ANI) February 20, 2018
We have lodged a complaint with SC/ST Commission against the casteist comments made by the Delhi Chief Secretary: Prakash Jarwal,AAP MLA pic.twitter.com/ujNy1LMya4
— ANI (@ANI) February 20, 2018