ஆருஷி கொலை வழக்கில் நிரபராதிகள் என கூறப்பட்ட தல்வார் தம்பதியினர் இன்று சிறையில் இருந்து வெளியே வந்தனர்.
டெல்லியின் அருகே உள்ள நொய்டாவைச் சேர்ந்த ராஜேஷ் தல்வார் மற்றும் நூபுர் தல்வார் தம்பதியரின் மகள் ஆருஷி தல்வார்.
கடந்த 2008-ஆம் ஆண்டு ஆருஷி மற்றும் அவரது வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜு இருவரும் அவர்களது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இவ்வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம், விசாரணையின் முடிவில் ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ் தல்வார் மற்றும் நூபுல் தல்வார் கைது செய்யப்பட்னர். பின்னர் இருவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தண்டனையை எதிர்த்து இருவரும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த அலகாபாத் நீதிமன்றம் கடந்த 12-ம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட ஆருஷியின் பெற்றோர் நிரபராதிகள் என கூறி அலகாபாத் நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தது.
இந்த நிலையில், இன்று(16-10-2017) மாலை சிறையில் இருந்து ஆருஷியின் பெற்றோர் வெளியே வந்தனர்.