இந்தியாவுக்கு படையெடுக்கும் 130 நாட்டு அழகிகள்... அதுவும் 27 ஆண்டுகளுக்கு பின்!

Miss World 2023: 27 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் உலக அழகி போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்தியா சார்பாக சினி ஷெட்டி என்பவர் பங்கேற்க உள்ளார். அவர் குறித்து இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jun 9, 2023, 04:24 PM IST
  • உலக அழகி போட்டி நடைபெறும் தேதி முடிவாகவில்லை.
  • ஆனால், நவம்பர் மாதத்தில் நடைபெறும் என தெரிகிறது.
  • சினி ஷெட்டி 2022இல் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றவர்.
இந்தியாவுக்கு படையெடுக்கும் 130 நாட்டு அழகிகள்... அதுவும் 27 ஆண்டுகளுக்கு பின்! title=

Miss World 2023 In India: 2023ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியை இந்தியா நடத்த உள்ளது. போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், சர்வதேச அழகிப் போட்டி 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெற இருக்கிறது. 

போட்டி நடைபெறஉம் தேதிகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், உலக அழகி போட்டியின் 71ஆவது பதிப்பு வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபெமினா மிஸ் இந்தியா 2022 பட்டத்தை வென்ற சினி ஷெட்டி, இந்த உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க இருக்கிறார். இந்தியா என்றால் உண்மையாக என்ன என்பதை உலகெங்கிலும் உள்ள தனது சகோதரிகளுக்குக் காண்பிப்பதில் உற்சாகமாக உள்ளதாக அவர் கருத்து தெரிவித்திருந்தார். 

2023 உலக அழகி போட்டியில் கலந்துகொள்வது குறித்து அவர் கூறுகையில்,"உலகம் முழுவதும் உள்ள எனது சகோதரிகள் அனைவரையும் இந்தியாவுக்கு வரவேற்க தயாராக உள்ளேன், அவர்களை சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியா எதன் பக்கம் நிற்கிறது, இந்தியா என்றால் என்ன, இந்தியாவில் உள்ள பன்முகத்தன்மை என்ன என்பதை அவர்களுக்குக் காண்பிப்பதற்காக நான் தேர்வாகியுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் பயணத்தை நான் மிகவும் உற்சாகமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்தியாவில் உங்களுக்கு சிறந்த நேரம் கிடைக்கும் என்று நம்புகிறேன்" என்றார். 

மேலும் படிக்க | ஆந்திராவில் பெய்த வைர மழை! ஓவர் நைட்டில் ஒபாமா ஆன விவசாயிகள்!
zeenews.india.com/tamil/videos/diamond-rain-in-andhra-farmers-got-rich-in-overnight-viral-news-448213

யார் இந்த சினி ஷெட்டி?

சினி ஷெட்டி மும்பையில் பிறந்தாலும், கர்நாடகாவில் வளர்ந்தவர். அதனால்தான் அவர் மிஸ் இந்தியா 2022 போட்டியில் அந்த மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். சினி ஷெட்டி கணக்கியல் மற்றும் நிதித்துறையில் பட்டப்படிப்பு முடித்துள்ளார். மிஸ் இந்தியா 2022 வெற்றியாளரான இவர் CFA (பட்டய நிதி ஆய்வாளர்) படிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. zeenews.india.com/tamil/movies/who-is-miss-india-2022-winner-sini-shetty-all-background-details-400607

சீனி ஷெட்டி மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். அவரது படிப்பு மட்டுமின்றி, நடனத்திலும் ஈடுபாடு கொண்டவர். பரதநாட்டியத்தில் அரங்கேற்றம் முடித்தபோது சீனி ஷெட்டிக்கு 14 வயதுதான் என கூறப்படுகிறது.

பிரியங்கா சோப்ரா தான் 

ஒரு நேர்காணலில், சினி ஷெட்டி, பிரியங்கா சோப்ரா தன்னை மிகவும் ஊக்கப்படுத்தியதாகவும், பிரியங்கா சோப்ராவின் வார்த்தைகள் எப்போதும் தன்னிடம் இருந்து வந்ததாகவும் தெரிவித்தார். அவர் கூறுகையில்,"நீங்கள் ஒருவரைப் பார்க்கும்போது அவர்களின் சில வார்த்தைகள் உங்களிடம் சிக்கிக் கொள்கின்றன. 

அபிலாஷைகளுக்கு மதிப்பு அதிகரிக்கிறது, பிரியங்கா சோப்ரா அழகிப் போட்டியின் நேர்காணலைக் கேட்டது எனக்கு நினைவிருக்கிறது. அங்கு அவர் கூறினார், 'கண்ணாடி செருப்புகளை அணிய பார்க்காதீர்கள். மாறாக, உங்கள் மேல் இருக்கும் கண்ணாடி கூரைகளை உடைத்து விடுங்கள்.' என்றார். அன்றிலிருந்து நான் அவரது ரசிகராக இருக்கிறேன்" என்றார். 

மேலும் படிக்க | காசு தராத ஆண் பயணியை பாலியல் வன்புணர்வு செய்த ஆட்டோ ஓட்டுநர்... புதரில் செய்த சம்பவம்!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News