ஆம் ஆத்மி எம்எல்ஏக்களிடம் குதிரை பேரமா? எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த அரவிந்த் கெஜ்ரிவால்

AAP Vs BJP : ஆம்ஆத்மி எம்எல்ஏக்களிடம் கட்சியில் இருந்து விலக பாஜக தரப்பில் இருந்து பேரம் பேசப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், நாளை எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.

Written by - Chithira Rekha | Last Updated : Aug 24, 2022, 07:53 PM IST
  • நாளை ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டம்
  • அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு
  • டெல்லி அரசியலில் பரபரப்பு
ஆம் ஆத்மி எம்எல்ஏக்களிடம் குதிரை பேரமா? எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த அரவிந்த் கெஜ்ரிவால் title=

டெல்லியில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்கள், மத்திய புலனாய்வு அமைப்புகளின் கீழ் விசாரணைகளை சந்தித்து வருகின்றனர். டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெய்ன் பண மோசடி வழக்கில் கடந்த மே மாதம் 30-ம் தேதி கைது செய்யப்பட்டார். 

இதனைத் தொடர்ந்து, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மீது அண்மையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் மணீஷ் சிசோடியாவுக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டது. இதனையடுத்து, ஆம் ஆத்மி - பாஜக இடையேயான மோதல் மீண்டும் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

மேலும் படிக்க | அரவிந்த் கேஜ்ரிவாலை ஒழிக்க நினைக்கிறதா பாஜக? சிபிஐ ரெய்ட் ஏன்? ஆம் ஆத்மி கேள்வி

அமெரிக்க நாளிதழில் டெல்லி கல்வித்துறையை பாராட்டி வெளியான கட்டுரைக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த சோதனை நடைபெற்று வருவதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. வழக்குகளில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் கட்சியை விட்டு விலக வேண்டுமென தான் மிரட்டப்படுவதாக மணீஷ் சிசோடியா பகிரங்கமாகத் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசைக் கவிழ்த்தது போல், டெல்லி அரசையும் கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கூறியுள்ளது.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஆம் ஆத்மியின் எம்.எல்.ஏ.க்கள் அஜய் தத், சஞ்சீவ் ஜா, சோம்நாத் பார்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர், பாஜகவின் முக்கியத் தலைவர்கள் தங்களைத் தொடர்பு கொண்டதாகவும், பாஜகவில் இணைய ரூ. 20 கோடி வழங்கப்படும் எனவும், பிற எம்.எல்.ஏ.க்களை அழைத்து வந்தால் ரூ. 25 கோடி வழங்கப்படும் எனவும் அவர்கள் தங்களிடம் பேரம் பேசியதாகவும் தெரிவித்தனர்.

மேலும், பாஜகவில் இணையாவிட்டால், மணீஷ் சிசோடியாவை போல் பொய் வழக்குகள் தொடரப்பட்டு சிபிஐ, அமலாக்கத்துறையை எதிர்கொள்ள நேரிடும் என்று தாங்கள் மிரட்டப்பட்டதாகவும் அவர்கள் கூறினர். இந்த பரபரப்பான சூழலில் நாளை எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுவித்துள்ளார். இது தொடர்பாக அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும், அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சம்மன் அனுப்பியுள்ளார்.

மேலும் படிக்க | டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் திடீர் கைது

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News