ஏடிஎம் மையங்கள் இன்று முதல் செயல்படும்

இன்று முதல் ஏ.டி.எம்.,கள் செயல்பாடுக்கு வருகின்றன. அத்துடன் ஏ.டி.எம்., மையங்களில் 50 ரூபாய் நோட்டுகளையும் பெறலாம் என வங்கிகள் அறிவித்துள்ளன.

Last Updated : Nov 11, 2016, 08:35 AM IST
ஏடிஎம் மையங்கள் இன்று முதல் செயல்படும் title=

புதுடெல்லி : இன்று முதல் ஏ.டி.எம்.,கள் செயல்பாடுக்கு வருகின்றன. அத்துடன் ஏ.டி.எம்., மையங்களில் 50 ரூபாய் நோட்டுகளையும் பெறலாம் என வங்கிகள் அறிவித்துள்ளன.

ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000  நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி அறிவித்தார். அதையடுத்து ஏடிஎம் இரண்டு நாட்கள்( 9,10-ம் தேதி) இயங்காது என தெரிவிக்கப்பட்டது.

தற்போது 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு வந்துள்ளதால் அதை ஏடிஎம் மையங்களில் நிரப்பும் பணியும் நடைபெற்று வருகிறது. அத்துடன் 100 ரூபாய் நோட்டுகளும் நிரப்பப்பட்டு வருகின்றன. இன்று முதல் ஏடிஎம் செயல்படும் என்று, அதில் பணம் எடுப்பவர்களுக்கு 2 ஆயிரம், 100 ரூபாய் நோட்டுகள் தான் கிடைக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.தற்போது 500 ரூபாய் நோட்டுகள் வராததால் அவை ஏடிஎம் மையங்களில் நிரப்பப்படவில்லை. 

இதனையடுத்து அனைத்து ஏ.டி.எம்., சேவை மையங்களும் இன்று காலை 10 மணி முதல் செயல்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் இன்று முதல் பொதுமக்கள் ஏ.டி.எம்., மையங்களில் 50 ரூபாய் நோட்டுகளையும் எடுக்கலாம் என வங்கிகள் தெரிவித்துள்ளன. இந்த அறிவிப்பு ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News