கடந்த 2010 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் "ராமஜென்ம பூமி" என கூறப்படும் சர்ச்சைக்குரிய நிலம் குறித்த வழக்கில் அலாகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்ற வந்த இந்த வழக்கு, கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள் அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மீண்டும் வழக்கு கடந்த அக்டோபர் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
அயோத்தி வழக்கு தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரனைக்கு வந்தது. இந்த வழக்கை புதிய நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் எனக்கூறி, வழக்கை மீண்டும் இந்த வருடம் ஜனவரி மாதம் 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
ஜனவரி மாதம் 4 ஆம் சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கில் முக்கிய தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வழக்கை விசாரிக்க புதிய நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்னும் அமைக்க வில்லை. நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைத்தவுடன் விசாரிக்கப்படும் எனக்கூறி, இந்த வழக்கை வரும் ஜனவரி 10 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு வழக்கை மீண்டும் ஒத்தி வைத்தது.
இந்த நிலையில், இன்று சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் குறித்து வழக்கை விசாரிக்க ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும். அந்த அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் மற்றும் பாப்தே, ரமணா, லலித், சந்திரசூட் என மற்ற நான்கு நீதிபதிகளும் இடம்பெறுவார்கள்.
இந்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தான் சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் குறித்து வரும் சனவரி 10 ஆம் தேதி விசாரணைக்கு வரும் வழக்கை விசாரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.