பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 12 பேரும் மனு தாக்கலை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மே 30-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டவர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
இதனால், லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோரும் ஆஜராகினர். கைது நடவடிக்கையை தவிர்க்க முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இதையேற்று நீதிமன்றம் அத்வானி உள்ளிட்டோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. ஒவ்வொருவரும் தலா ரூ.50,000 பிணையாக செலுத்தி ஜாமீன் பெற்றனர்.
மேலும் ஒரு மனுவை தாக்கதல் செய்தனர். அந்த மனுவில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 12 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இதனை தள்ளுபடி செய்துள்ளது.
Special CBI court rejects discharge application, charges to be framed against all 12 accused in #Babri case pic.twitter.com/wNRpdz0ImR
— ANI UP (@ANINewsUP) May 30, 2017
1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ம் தேதி அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அத்வானி உள்ளிட்ட 21 தலைவர்கள் மீதும் பதிவு செய்யப்பட்டன. ஆனால், பாபர் மசூதி இடிப்பு தொடர்பான குற்றச்சதி வழக்கில் இருந்து அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 21 பேரை ரேபரேலி கோர்ட்டு 2001-ம் ஆண்டு விடுவித்தது. இதை அலகாபாத் ஐகோர்ட்டு 2010-ம் ஆண்டு உறுதிசெய்தது.
ஆனால் இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் இரண்டு ஆண்டுக்குள் வழக்கை முடிக்குமாறு சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி ஆகியோரிடம் விசாரணை செய்ய வேண்டி உள்ளதால், வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகுமாறு சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.