Video: வந்தே பாரத் ரயிலில் தீ... பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றம்!

Fire In Vande Bharat Express: போபாலில் இருந்து டெல்லிக்கு சென்றுகொண்டிருந்த வந்தே பாரத் ரயிலின் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் வீடியோ இணையத்தில் பரவி வருகின்றன.

Written by - Sudharsan G | Last Updated : Jul 17, 2023, 09:21 AM IST
  • இந்தியா முழுவதும் 25 வழித்தடங்களில் வந்தே பாரத் இயக்க்பபடுகிறது.
  • வந்தே பாரத் அதிவேக மற்றும் அதி நவீன வசதி கொண்ட ரயிலாகும்.
  • பேட்டரி பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது என தகவல்.
Video: வந்தே பாரத் ரயிலில் தீ... பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றம்!  title=

Fire In Vande Bharat Express: போபாலில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயிலின் பெட்டி இன்று காலை திடீரென தீப்பிடித்தது. முன்னதாக ஹபீப்கஞ்ச் என்று அழைக்கப்படும் ராணி கமலாபதி நிலையத்தில் இருந்து புது டெல்லியில் உள்ள நிஜாமுதீன் நோக்கி ரயில் புறப்பட்டபோது ஒரு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

குர்வாய் கெத்தோரா ரயில் நிலையத்தில் இருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டி ஒன்றில் பேட்டரி பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படை அதிகாரிகள் குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக ரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

"குர்வாய் கெத்தோரா நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகளில் ஒன்றின் பேட்டரி பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்" என்று ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பெங்களூருவில் எதிர்க்கட்சிகள்... இன்றிரவு விருந்துடன் தொடங்கும் கூட்டம் - முழு விவரம்!

இந்த சம்பவம் தொடர்பாக இணையத்தில் பதிவிடப்பட்ட வீடியோக்களில் ஒரு பெட்டியில் தீ எரிவது தெரிந்தது. சிலர் அங்கு தீயை அணைக்க முயற்சிப்பதையும் காண முடிந்தது. குர்வாய் கெத்தோரா நிலையத்தில் ரயிலுக்கு வெளியே பயணிகள் காத்திருப்பதை மற்ற வீடியோக்கள் காட்டுகின்றன.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள ராணி கம்லாபதி ரயில் நிலையம் மற்றும் டெல்லியில் உள்ள ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையம் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி வைத்தார். இந்த ரயில் 7 மணி 30 நிமிடங்களில் 701 கிலோமீட்டர் தூரத்தை கடக்கிறது மற்றும் சனிக்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் இந்த ரயில் இயக்கப்படுகிறது. 

பல்வேறு வசதிகளை கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த 2019ஆம் ஆண்டு பிப். 15ஆம் தேதி பிரதமர் மோடியால் தொடங்கிவைக்கப்பட்டது. டெல்லி - வாரணாசிக்கு இடையே முதன்முதலில் இந்த ரயில் இயக்கப்பட்டது. தற்போது 25 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை - மைசூர், சென்னை - கோவை ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. 

வந்தே பாரத் ரயிலில் பயணிக்கும் பயணிகளின் பொழுதுபோக்கிலும் முழு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் உள்ளே 32 இன்ச் தொலைக்காட்சி உள்ளது. வந்தே பாரத் ரயிலில் பயணிகளின் பாதுகாப்புக்கு முழு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதில், ஃபயர் சென்சார், ஜிபிஎஸ், கேமரா ஆகிய வசதிகளையும் பெறுகின்றனர்.
தேவையற்ற ஆபத்தில் இருந்து பாதுகாக்க, வந்தே பாரத் ரயிலில் ரயில்வே 'சுரக்ஷா கவாச்' என்ற பாதுகாப்பு அம்சமும் நிறுவப்பட்டுள்ளது, இது மற்றொரு ரயிலில் மோதாமல் பாதுகாக்கிறது. 

மேலும் படிக்க | வளையல் அணிய தடை... மத்திய அரசு விதித்தது தான்... கர்நாடகா அரசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News