இந்தியாவில் முதன்முறையாக வந்தே பாரத் ரயில் சேவை நிறுத்தம்! காரணம் என்ன?

Vande Bharat Replace Tejas Express: பிலாஸ்பூர்-நாக்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மோசமான முன்பதிவுகாரணமாக தேஜாஸ் எக்ஸ்பிரஸ் மாற்றப்பட்டது.

Written by - Shiva Murugesan | Last Updated : May 15, 2023, 01:53 PM IST
  • முன்பதிவு திருப்திகரமாக இல்லை, இந்தியாவில் முதல்முறையாக வந்தே பாரத் ரயில் சேவை நிறுத்தம்.
  • நாக்பூர் மற்றும் பிலாஸ்பூர் இடையேயிலான வந்தே பாரத் ரயில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயங்கும்.
  • எக்ஸிகியூட்டிவ் வகுப்பிற்கான கட்டணம் ரூ.2,045, கார் சேர் வகுப்பிற்கான கட்டணம் ரூ.1,075 ஆகவும் நிர்ணயம்
இந்தியாவில் முதன்முறையாக வந்தே பாரத் ரயில் சேவை நிறுத்தம்! காரணம் என்ன? title=

Bilaspur-Nagpur Vande Bharat Express Stop: வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள்: இந்தியாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை விரிவுபடுத்துவதற்கான இந்திய ரயில்வேயின் முயற்சிகள் தொடர்ந்து கொண்டு இருக்கும் நேரத்தில், பிலாஸ்பூர் மற்றும் நாக்பூர் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருப்பதால், மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்ட நாள் முதல் இதுவரை இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகவில்லை. வந்தே பாரத் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது இந்தியாவில் இதுவே முதல்முறையாகும்.

இந்தியாவில் முதல்முறையாக வந்தே பாரத் ரயில் சேவை நிறுத்தம்:
கடந்த ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரமதர் மோடி மிகுந்த ஆரவாரத்திற்கு மத்தியில் தொடங்கி வைத்தார். இருப்பினும், அதிக விலைக் கட்டணங்கள் காரணமாக, முதல் நாளிலிருந்தே முன்பதிவு திருப்திகரமாக இல்லை எனவும், எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு முன்பதிவு செய்யப்படவில்லை என்றும், அதாவது 50 சதவீத அளவுக்கே முன்பதிவு நடப்பதால், வந்தே பாரத் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க - வந்தே பாரத் முதல் ராஜதானி வரை... இந்தியாவில் ஓடும் அதிவேக ரயில்கள் - முழு விவரம்!

நாக்பூர்-பிலாஸ்பூர் வந்தே பாரத் ரயிலின் கட்டணம் எவ்வளவு? 
நாக்பூர் மற்றும் பிலாஸ்பூர் இடையே இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலின் எக்ஸிகியூட்டிவ் வகுப்பிற்கான கட்டணம் ரூ.2,045 ஆகவும், கார் சேர் வகுப்பிற்கான கட்டணம் ரூ.1,075 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. நாக்பூர் மற்றும் பிலாஸ்பூர் இடையேயிலான வந்தே பாரத் ரயில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயங்கும் திறன் கொண்டது. இனி வந்தே பாரத் ரயிலுக்கு பதில் தேஜஸ் ரயில் நாக்பூர் மற்றும் பிலாஸ்பூர் இடையே இயக்கப்படும்.

பல மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்:
வந்தே பாரத் ரயில் சேவைக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை அடுத்து பல மாநிலங்கள் மற்றும் நகரங்களை உள்ளடக்கிய 15 வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. மேலும் இந்த சேவையை அதிகரிக்க, நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் மேலும் ஐந்து வந்தே பாரத் ரயில்களை சேர்க்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த ஐந்து ரயில்களில் முதல் ரயில் பூரி-ஹவுரா வழித்தடத்தில் தொடங்க உள்ளது. இந்த மாதமே இந்த சேவை தொடங்கப்படும். ஹவுரா-பூரி வழித்தடத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் வெற்றிகரமான சோதனை ஓட்டத்திற்குப் பிறகு, புவனேஸ்வர்-ஐதராபாத், பூரி-ராய்பூர் மற்றும் பூரி-ஹவுரா வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை இயக்க அதிவேக ரயில்களை ஒடிசா அரசு வலியுறுத்தியு உள்ளது.

மேலும் படிக்க - வந்தே பாரத்... 'வாவ்' போட்ட வானதி! ஆர்வத்தில் கோளாறாக பேச்சு - விமானத்தை போல் வேகமா?

ஹவுரா-பூரி வழித்தடத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலின் நேரம் என்ன?
ரயில்வேயின் தகவலின்படி, பூரி-ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மேற்கு வங்கத்தில் உள்ள ஹவுராவில் இருந்து காலை 5:50 மணிக்கு புறப்பட்டு, ஒடிசாவில் உள்ள பூரியை 11:50 மணிக்கு சென்றடையும். வந்தே பாரத் மதியம் 2 மணிக்கு பூரியில் இருந்து புறப்பட்டு இரவு 7:30 மணிக்கு ஹவுரா சென்றடையும். குர்தா சாலை சந்திப்பு, புவனேஸ்வர், கட்டாக், ஜாஜ்பூர் கியோஞ்சர் சாலை, பத்ரக், பாலசோர் மற்றும் ஹல்டியா ஆகிய ரயில் நிலையங்கள் பூரி-ஹவுரா இடையிலான வந்தே பாரத் ரயிலின் நிறுத்தங்களாக இருக்கும்.

மேலும் படிக்க - Viral Video: தேவையா இது... செல்ஃபியால் வந்த சிக்கல்! வந்தே பாரத் ரயிலில் சிக்கிய நபர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News