பாஜக தலைவர் ஜெய் பகவான் கோயல் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 13) தேசிய தலைநகரில் வெளியிட்ட 'Today's Shivaji Narendra Modi' புத்தகம் மகாராஷ்டிராவில் ஒரு அரசியல் புயலை தூண்டியுள்ளது!
மாநிலத்தின் மூன்று ஆளும் கட்சிகளாலாளும் (சிவசேனா, காங்கிரஸ் மற்றும் NCP) இந்த புத்தகம் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது, மேலும் இதை ஒரு பெரிய மராட்டிய போர்வீரனின் கொள்கைகளுக்கு அவமானம் என்றும் குறிப்பிட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிவாஜி இடையே ஒப்பீடுகள் வரையப்பட்டதற்காக புனேவில் NCP மற்றும் சம்பாஜி படைப்பிரிவின் தொண்டர்கள் புத்தகத்திற்கு எதிராக லால்மஹால் பகுதிக்கு வெளியே போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் NCP இந்த ஒப்பீட்டைக் கண்டித்து, மராட்டிய பேரரசரின் புகழ்பெற்ற வரலாற்றை அழிப்பதற்கான நடவடிக்கை என்று கூறிய 48 மணி நேரத்தில் புத்தகத்தை திரும்பப் பெறச் சொன்னது, ஒருவேளை புத்தகம் திரும்ப பெறாவிட்டால் மேலும் போராட்டங்கள் அதிகமாக வெடிக்கும் என எச்சரித்துள்ளது.
முன்னதாக ஞாயிறு அன்று சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத், புத்தகத்தையும் அதன் ஆசிரியரையும் மகாராஷ்டிரா மற்றும் மராத்தி மக்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டினார். "பாஜக அலுவலகத்தில் வெளியிடப்பட்ட இந்த புத்தகத்தின் எழுத்தாளர் ஜெய் பகவான் கோயல் என அறியப்படுகிறார்.
ஜெய் பகவானை விமர்சித்துள்ள சஞ்சய் ரவுத் இதுகுறித்து தெரிவிக்கையில்., "யார் இந்த ஜெய் பகவான் கோயல்?... டெல்லியில் மகாராஷ்டிரா சதானைத் தாக்கி அதே பகவான் தான். தற்போது சிவாஜி மகாராஜின் புகழினையும் மகாராஷ்டிரா மற்றும் மராத்தி மக்களையும் துஷ்பிரயோகம் செய்துள்ளார். நன்றாக செய்துள்ளீர் பாஜக. !!!" என குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா அரசாங்கத்தில் NCP தலைவரும் அமைச்சரவை அமைச்சருமான தனஞ்சய் முண்டே புத்தகத்தை விமர்சிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., 'சத்ரபதி சிவாஜி மகாராஜின் மகத்துவத்தை யாராலும் ஈடுசெய்ய இயலாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சச்சின் சாவந்த் கூறுகையில், "நரேந்திர மோடிஜியை சிவாஜி மகாராஜுடன் ஒப்பிடுவதற்கான பாஜகவின் டெல்லி அலுவலகத்தால் எடுக்கப்பட்ட முயற்சியை நாங்கள் கண்டிக்கிறோம். சிவாஜி மகாராஜ் தனது மதிப்புகள் மற்றும் சித்தாந்தங்களுக்காக அறியப்பட்டார், இது அனைவரையும் ஒன்றாக இணைத்து ஸ்வராஜ்யத்தை நிறுவியது. அந்த இலட்சியங்கள் அனைத்தும் இங்கு அச்சுறுத்தப்படுகின்றன சிவாஜி மகாராஜின் நிலை குறைக்கப்படுகிறது." என தெரிவித்துள்ளார்.
புத்தகத்தின் ஆசிரியரைப் பற்றி பேசுகையில், கோயல் ஒரு முன்னாள் சிவசேனா தலைவர், அதன் வட இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை எதிர்த்து 2008-ல் கட்சியை விட்டு வெளியேறி, 2014-ல் பாஜகவில் சேர்ந்தார். அதைத்தொடர்ந்து தற்போது அவர் புதுதில்லியில் வசித்து வருகின்றார்.