சர்ச்சை பேச்சு: தினமும் டஜன் கணக்கான உயிர்களை இழந்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கும், மில்லியன் கணக்கானவர்களுக்கு வேலையில்லாமல் இருக்கும் ஒரு ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியில், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ ஒருவர் முஸ்லிம் [Muslim] விற்பனையாளர்களிடமிருந்து காய்கறிகளை வாங்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக எம்எல்ஏ சுரேஷ் திவாரி [Suresh Tiwari] தியோரியா மாவட்டத்தில் ஒரு குழுவினருடன் பேசுவதையும், பல சமூக ஊடக பயனர்களை "வகுப்புவாதம்" [Communal] என்று கூறியதை காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பர்ஹாஜ் தொகுதியைச் [Barhaj Constituency]சேர்ந்த லெக்ஸ்லேட்டர் [Legslator]வீடியோவில் கூறியது, "நான் எல்லோரிடமும் வெளிப்படையாகச் சொல்கிறேன். முஸ்லிம்களிடமிருந்து யாரும் காய்கறிகளை வாங்கக்கூடாது" எனக் கூறுகிறார். அதைக்கேட்டுக்கும் மற்றவர்கள், அவரின் பேசுக்கு உடன்படுகிறார்கள்.
BJP எம்எல்ஏ சுரேஷ் திவாரி தனது தொகுதிக்கு விஜயம் செய்தபோது ஏப்ரல் 17-18 தேதிகளில் இந்த வீடியோ எடுக்கப்பட்டது.
இந்த சர்ச்சை வீடியோ குறித்து செவ்வாயன்று, பாஜக எம்.எல்.ஏ-விடம் கேட்டபோது, நான் கூறியது சரி தான் என அவர் தனது அறிக்கையை ஆதரித்தார். மேலும் அவர் மக்களின் பிரச்சனையை தான் பேசினேன் என்று கூறினார்.
அவர் தொகுதியை பார்வையிட்டபோது 10-12 பேர் கொண்ட ஒரு குழு தன்னை சந்தித்ததாகவும், கொரோனா வைரஸை பரப்புவதற்காக முஸ்லிம் விற்பனையாளர்கள் காய்கறி மீது எச்சில் [Spit]வைக்கிறார்கள் என்று அவர்கள் புகார் தெரிவித்ததாகக் கூறினார்.
அதனால் தான், "முஸ்லிம்களிடமிருந்து காய்கறிகளை வாங்க வேண்டாம் என்றும், கொரோனா வைரஸிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று நான் அவர்களுக்கு அறிவுறுத்தினேன் என்றார்.
இதில் நான் ஏதாவது தவறு சொன்னேனா? அவர்களிடம் வாங்கும் காய்கறிகளை மக்கள் குப்பையில் வீசுகிறார்கள். எனவே அவர்களிடமிருந்து (முஸ்லிம்களிடமிருந்து) காய்கறிகளை வாங்க வேண்டாம் என்று நான் என் மக்களிடம் கேட்டுக்கொண்டேன். இது ஒரு பெரிய பிரச்சினையாக மாற்றப்பட்டு வருகிறது என்று திவாரி செவ்வாயன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
இதற்கிடையில், மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி இதுபோன்ற அறிக்கைகளுக்கு கட்சி ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், இது அவரின் தனிப்பட்ட கருத்து என்று கூறியுள்ளார்.
டெல்லியின் நிஜாமுதீனில் உள்ள தப்லிகி ஜமாஅத் தலைமையகம் கொரோனா வைரஸின் மையம் என அறிவிக்கப்பட்டதை அடுத்து முஸ்லிம்களுக்கு எதிரான வெறுக்கத்தக்க பேச்சுக்கள் அதிகரித்தன. நாட்டில் வைரஸ் பரவியதற்கு ஜமாஅத்தை பல பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த கருத்துக்களுக்குப் பின்னர், முஸ்லீம் விற்பனையாளர்கள் மூலம் வைரஸை பரப்பக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் பல சுற்றுப்புறங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படாத பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கொரோனா வைரஸை பரப்புவதற்காக முஸ்லீம் விற்பனையாளர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளில் எச்சில் துப்புகிறார்கள் என்ற வதந்திகளால் சமூக ஊடகங்கள் குழப்பமடைந்துள்ளன.