கடந்த நான்கு ஆண்டு பாஜக ஆட்சியில் பெட்ரோல் விலை ரூ.9 மட்டும் தான் உயர்ந்துள்ளது என பாஜக தேசியச் செயலாளர் H ராஜா அவர்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்!
இந்ந பதிவானது தற்போது கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. கடந்த நான்கு நாட்களாக பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டு வருவதன் தொடர்ச்சியாக கடந்த சனி அன்று பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தலா 9 பைசா குறைந்துள்ளது.
இதனையடுத்து ட்விட்டரில் #CutFuelTaxes என்னும் ஹாஸ்டேக் ட்ரெண்ட் ஆனது. இந்த ஹேஷ்டேக் மூலம் மத்திய அரசு பெட்ரோல் டீசல் ஆகிய எரிபொருட்கள் மீதான வரியைக் குறைக்க வலியுறுத்தி ஏராளமானோர் கண்டனங்களை பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில், பாஜக தேசியச் செயலாளர் H.ராஜா அவர்கள் எரிபொருட்கள் மீதான விலை உயர்வு குறித்து புள்ளி விவரத்துடுன் தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்.
In 2004 when you came to power the price of petrol was 33/- per lit. In 2014 when you quit it was 74/- per lit (6.6.2014) increase of Rs.40/- in 10 years. But today it is 83/- per lit. That is only an increase of ₹.9/- in 4 years. https://t.co/1eppvsjMFR
— H Raja (@HRajaBJP) June 2, 2018
“கடந்த 2004ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது ரூ.33-ஆக இருந்த பெட்ரோல் விலை, 2014-ஆம் ஆண்டில் அவர்கள் ஆட்சியை இழந்தபோது லிட்டருக்கு ரூ.74 ஆக உயர்தது. ஆக இந்த 10 ஆண்டு ஆட்சியில் 40 ரூபாய் உயர்ந்திருக்கிறது. ஆனால், தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83-ஆக தான் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் வெறும் 9 ரூபாய் மட்டுமே அதிகரித்துள்ளது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.