டெல்லியில் மூன்று மாநகராட்சிக்கு கடந்த 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்த வார்டுகள் எண்ணிக்கை 272. இவற்றில் 2 வார்டுகளில் வாக்குப்பதிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், 270 வார்டுகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 54 சதவீத வாக்குகள் பதிவாகின.
டெல்லி மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. அதில் பா.ஜனதா வாக்கு 183 இடங்களில் முன்னிலை பெற்று முதலிடம் பிடித்து உள்ளது. ஆம் ஆத்மி 48 இடங்களிலும், காங்கிரஸ் 27 இடங்களிலும் முன்னிலை பெற்று உள்ளது.
டெல்லி மாநகராட்சி தேர்தலில் குறித்து ஆம் ஆத்மி கூறியதாவது:-
பா.ஜனதா வெற்றி பெற்றதற்கு மோடி அலை கிடையாது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (இவிஎம்) செய்யப்பட்ட மோசடியே காரணம் எனக்கூறியுள்ளது.
உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் மாநில தேர்தலின் போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (இவிஎம்) மோசடி செய்யப்பட்டு உள்ளது என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது. இதே குற்றச்சாட்டை இப்போதும் ஆம் ஆத்மி கட்சி கூறி உள்ளது.