எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்களுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு....!
எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்களுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அரசு அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யக் கூடாது, மேல் அதிகாரிகளின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று உத்தரவிட்டதற்கு கடும் எதிர்ப்பு காணப்பட்டது. இதனையடுத்து நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வந்த மத்திய அரசு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இந்த சட்டத்திருத்தத்தை தடை செய்யக் கோரி, இரண்டு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சட்டத்திருத்தத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமையில் ஈடுபட்டால் முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்ற சட்டத்திருத்தம் குறித்து 6 வாரங்களில் விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.