ஆதார் கார்டு என்பது இந்தியாவில் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக விளங்கிவிட்டது. அத்தியாவசியம் என்ற நிலையில் இருந்து ஆதார் கார்டு கட்டாயம் என்ற நிலைக்கு இந்திய மக்கள் அனைவரும் வந்துவிட்டனர். மத்திய, மாநில அரசின் அனைத்துத் திட்டங்களுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசின் திட்டங்களைத் தவிர்த்து வங்கி பரிவர்த்தனை உட்பட அனைத்து பரிவர்த்தனைகளுக்கும், தனியார் நிறுவனங்களின் முகவரி உத்தரவாதத்திற்கும் ஆதார்தான் என்ற நிலைக்கு வந்துவிட்டோம்.
மேலும் படிக்க | ஆதார் கார்டுடன் புதிய போன் நம்பரை இணைப்பது எப்படி?
இந்நிலையில், ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்குமாறு தொடர்ந்து இரண்டு ஆண்டு காலமாக மத்திய அரசு அவகாசம் அளித்துக்கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல், பான் கார்டை வங்கி எண்ணுடன் இணைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அனைத்து பரிவர்த்தனை தாண்டி வாழ்வதற்கு ஆதாரும், பான் கார்டும் மிக முக்கியம் என்ற நிலைக்கு அனைவரும் வந்துவிட்டோம். ஆனாலும், ஆதார் கார்டு பாதுகாப்பானதா என்ற கேள்வியின் சர்ச்சை மட்டும் உச்சநீதிமன்றம் வரை சென்று விசாரணையில் இருந்து வருகிறது.
தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் ஆதார் பாதுகாப்பானது இல்லை என்றும், பயனாளர்களின் தகவல்கள் அதன் மூலம் திருடப்படுவதாகவும் ஒரு வாதம் இருந்துகொண்டே இருந்தது. ஆதார் பயன்படுத்துவர்களின் தகவல்கள் அனைத்தும் பத்திரமாக பாதுகாக்கப்படும் என்று மத்திய அரசு ஒவ்வொரு முறை உத்தரவாதம் அளித்துக்கொண்டே இருந்துவந்த நிலையில் இன்று திடீரென மத்திய அரசிடம் இருந்து ஓர் அறிக்கை வந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அந்த அறிக்கையில், ஆதார் அட்டை நகலை யாரிடமும் வழங்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆதார் நகலை பெறும் நிறுவனங்கள் அதை தவறாக பயன்படுத்தக்கூடும் என்றும் கூறப்பட்டிருந்தது. எனவே, மறைக்கப்பட்ட ஆதார் எனப்படும் கடைசி 4 இலக்கங்கள் கொண்ட ஆதார் அட்டை எண்களை மட்டும் பயன்படுத்தவும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. மேலும், ப்ரவுஸிங் சென்டர்களில் இ-ஆதார் அட்டையை டவுன்லோடு செய்யாதீர்கள் என்றும், ஒருவேளை அப்படிச் செய்தால் உடனடியாக அதை ‘டிலீட்’ செய்யுமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. குறிப்பாக, பொது இடங்களில் ஆதார் விவரங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அதை அங்கிருந்து அழித்துவிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மேலும் படிக்க | ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்ற ஆசையா? செயல்முறை இங்கே பார்க்கவும்!
இந்த அறிவிப்பு வெளியானவுடன் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். ஆதார் எல்லாவற்றுக்கும் கட்டாயம் என்றுகூறி விட்டு தற்போது அது பயன்படுத்துவது ஆபத்து என்று சொல்வது எந்த வகையில் நியாயம் என்று சமூக வலைதளங்களில் பலர் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர். இதையடுத்து, காலையில் வெளியிட்ட அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற்றது. மாலையில் மற்றொரு அறிக்கை ஆதார் இணையத்தின் பெங்களூர் பிராந்திய அலுவலகம் சார்பாக வெளியிடப்பட்டது. அதில், மத்திய அரசின் அறிவிப்புச் செய்தியை மக்கள் தவறாக புரிந்து கொள்வதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதை கருத்தில் கொண்டு, முன்னர் வெளியிட்ட சுற்றறிக்கையைத் திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR