UAE நிதியுதவி விவகாரத்தில் நல்ல முடிவு வரும் -பினராயி!

நல்லெண்ண அடிப்படையில் மற்றொரு நாடு நிதியுதவி வழங்கினால் அதை ஏற்கும் வகையில் மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்!

Last Updated : Aug 22, 2018, 09:02 PM IST
UAE நிதியுதவி விவகாரத்தில் நல்ல முடிவு வரும் -பினராயி! title=

நல்லெண்ண அடிப்படையில் மற்றொரு நாடு நிதியுதவி வழங்கினால் அதை ஏற்கும் வகையில் மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்!

கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் இருந்து கேரளா தற்போது மீண்டு வருகிறது. எனினும் ஏற்பட்டு பாதிப்புகளில் இருந்து முழுவதுமாக மீள 5 மாதங்கள் வரை ஆகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னாதக கேரளாவிற்கு அரபு அமிரகம் நிதி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என தகவல்கள் பரவி வந்த நிலையில் இன்று முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

இச்சந்திப்பின் போது அவர் தெரிவித்ததாவது...

"வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு வெளிநாடுகள் வழங்கும் நிதியை பெற மத்திய அரசின் அனுமதி அவசியமானது. தற்போது ஐக்கிய அரபு எமிரெட்ஸ் வழங்குவதாத தெரிவித்த 700 கோடி ரூபாய் பெறுவது குறித்து மத்திய அரசு நல்ல முடிவெடுக்க வேண்டும்.

கேரளாவில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்ட வீரர்களுக்காக ஆகஸ்ட் 26-ம் தேதி நன்றி தெரிவிக்கும் பிரிவு உபச்சார நிகழ்ச்சி நடத்தப்படும். 

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிப் பெற்றுள்ளது. இந்த வெற்றியினை அணித்தலைவர் விராட் கோலி கேரள மக்களுக்காக சமர்பித்தது மகிழ்ச்சி அளிக்கின்றது.

நல்லெண்ண அடிப்படையில் மற்றொரு நாடு நிதியுதவி வழங்கினால் அதை ஏற்கும் வகையில் மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கும் என நம்புகின்றோம், 2016 தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கைப்படி வெளிநாட்டு நிதியை ஏற்றுக் கொள்ளலாம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்

Trending News