கொரோனா வைரஸ் அச்சத்தில் பொதுமக்கள் தனிமைப்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது பல முக்கிய துறைகளின் தலைவர்கள் உட்பட பல மூத்த மருத்துவர்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கேரளாவின் மருத்துவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. கேரளாவின் ஸ்ரீ சித்ரா திருனல் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (SCTIMST) நோயளிகளை கவனித்த வந்த மருத்துவர் சமீபத்தில் ஸ்பெயினிலிருந்து திரும்பி வந்துள்ள நிலையில் சமீபத்தில் அவருக்கும் கொரோனா தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த மருத்துவரின் சோதனை முடிவுகள் நேர்மறையாக வெளியாகியுள்ளது என கேரளா சுகாதார துறை அமைச்சர் ஞாயிற்றுக்கிழமை மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், மருத்துவரின் உடன் பணிபுரிந்த அதிகாரிகள், மற்ற மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் என அனைவரும் தற்போது கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மற்றும் பிற சிகிச்சைகளுக்காகக் காத்திருக்கும் நோயாளிகளை வெளியேற்றவும், அவசர அவசரநிலைகளை மட்டுமே எடுக்கவும் அவர்கள் நிறுவனத்தின் இயக்குநருக்கு சுகாதார துறை அமைச்சு கடிதம் எழுதியுள்ளது.
SCTIMST ஊழியர்களுக்கு உள் தகவல்தொடர்பு மூலம் தெரிவிக்கப்பட்ட தகவல்களின்படி, தலையீட்டு நடைமுறைகளை கையாளும் மருத்துவர், மார்ச் 1 அன்று ஸ்பெயினிலிருந்து கேரளா திரும்பியுள்ளார்.
எனினும் அவர் கொரோனா அறிகுறியற்றவராக இருந்ததன் காரணமாக மார்ச் 2 முதல் 5 வரை டிஜிட்டல் சப்ஸ்ட்ரக்ஷன் ஆஞ்சியோகிராபி ஆய்வகத்தில் பணிபுரிந்துள்ளார். பின்னர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் அவர் நோயாளிகளிடம் இருந்து விலகி இருந்துள்ளார்.
இதனையடுத்து மார்ச் 8-ஆம் தேதி, அவருக்கு தொண்டை வலி ஏற்பட்டுள்ளது, இதனைத்தொடர்ந்து அவர் தனது பயண வரலாற்றை கண்காணிப்பாளரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. எனினும் மார்ச் 10 மற்றும் 11 தேதிகளில் வெளிநோயாளர் கிளினிக்கில் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
மார்ச் 12 அன்று, வீட்டு தனிமைப்படுத்தலுக்குச் சென்ற அவர், மார்ச் 13 அன்று, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா பராமரிப்பு கிளினிக்கிற்கு அறிக்கை அளித்தார். தொடர்ந்து அவர் மார்ச் 14 அன்று தனிமைப்படுத்தப்பட்டார் மற்றும் அவரது மாதிரி ஞாயிற்றுக்கிழமை நேர்மறையான முடிவு பெற்றது.
மருத்துவரின் சோதனை முடிவுகள் மற்ற மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்க, மத்திய வெளிவிவகார அமைச்சர் V முரளிதரன் அரசுமுறை பணிக்காக இந்த மருத்துவமனைக்கு கடந்த 14-ஆம் தேதி சென்றதாக தெரிகிறது. இதன் காரணமாக முரளிதரனுக்கு கொரோனா தொற்று பரவியிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் அவருக்கு கொரோனா சோதனை நடத்தப்படுமா? இல்லையா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.