Amit Shah Speech: சத்தீஸ்கர் மாநில கோர்பாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "பூபேஷ் பாகேல் அரசில் நக்சலிசம் ஊக்குவிக்கப்பட்டது. விஷ்ணு தேவ் சாய் தலைமையில் எங்கள் அரசு அமைந்தபோது, 4 மாதங்களில் 95 பேர் கொல்லப்பட்டனர். 350 பேர் கைது செய்யப்பட்டனர் எனக் கூறினார்.
மன்னிப்பு கேட்ட அமித் ஷா
கட்கோராவில் தேர்தல் பேரணியில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சைதுர்கரின் ஆதிசக்தி மகிஷாசுர் மர்தினிக்கு அஞ்சலி செலுத்தி வருவதற்குள் சிறிது தாமதம் ஏற்பட்டுவிட்டதாகவும், இது கோடைக்காலம், மக்கள் வெயிலில் நிற்கிறார்கள். அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து, தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
ராமர் கோயில் கட்ட காங்கிரஸ் விரும்பவில்லை
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டுமா இல்லையா என்று கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களிடம் அமித் ஷா கேள்வி எழுப்பினார். ஆனால் ராமர் கோயில் பிரச்சினையை காங்கிரஸ் நிலுவையில் வைத்திருந்தது.
जब तक भाजपा का एक भी सांसद भारत की संसद में है, ST, SC और OBC के आरक्षण को न हम हटाएंगे, और न कांग्रेस को हटाने देंगे।
ये मोदी की गारंटी है।
- श्री @AmitShah
पूरा वीडियो देखें : https://t.co/BTgDzv8htF pic.twitter.com/yE5GlSoLHk
— BJP (@BJP4India) May 1, 2024
பிரதமர் மோடி ராமர் கோயிலைக் கட்டினார்
சத்தீஸ்கர் உள்ள 11 தொகுதிகளில் 9 தொகுதியில் வெற்றியை கொடுத்து நரேந்திர மோடியை இரண்டாவது முறையாக நீங்கள் பிரதமராக அமரவைத்தீர்கள். அந்த பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 22 ஆம் தேதி ஸ்ரீராமர் கோயிலைக் கட்டி நிறுவியதாக அமித் ஷா கூறினார்.
ராம்லாலாவின் நெற்றியில் சூர்ய ஒளி
500 ஆண்டுகளுக்குப் பிறகு ராம்லாலாவின் நெற்றியில் சூர்ய திலகத்தைப் பார்த்த அனைவரும் அதிர்ஷ்டசாலிகள் என்று கூறினார். சோனியா, கார்கே, ராகுல் பாபா ஆகியோருக்கு ராம் லல்லா கும்பாபிஷேகம் செய்ய அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால் கும்பாபிஷேகத்திற்கு யாரும் வரவில்லை.
நக்சல் பிரச்சனையை வேரோடு அகற்றுவோம்
பூபேஷ் அரசு தொடர்ந்து நக்சலிசத்தை ஊக்குவிக்க வேண்டும் என செயல்பட்டது என்று அமித் ஷா கூறினார். ஆனால் பாஜக தலைமையில் விஷ்ணு தேவ் சாய் அரசு அமைந்து, விஜய் சர்மா உள்துறை அமைச்சராக பதவியேற்ற நான்கு மாதங்களுக்குள் 50 பேர் கொல்லப்பட்டனர். 350 பேர் சரணடைந்தனர். ஜார்கண்ட், ஒடிசா, பீகார் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து நக்சலிசத்தை மோடி ஒழித்துள்ளார். நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்குங்கள், நக்சலிசம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் முடிவுக்கு வரும் என்று அமித் ஷா கூறினார்.
மேலும் படிக்க - ஏழைகளிடம் இருந்து பணத்தை பறித்து கோடீஸ்வரர்களிடம் ஒப்படைத்தார் மோடி -ராகுல் காந்தி
மோடி 10 ஆண்டுகளில் செய்த பணிகள் ஏராளம்
தலித் மற்றும் ஏழை பழங்குடியினரின் ஆட்சி எங்கள் ஆட்சியாக இருக்கும் என்று 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி கூறியதாக அமித் ஷா கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் பல பணிகள் செய்யப்பட்டு உள்ளன, ஒவ்வொரு ஏழைக்கும் வீடு, தண்ணீர் குழாய், காஸ் சிலிண்டர், 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு, ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் 5 கிலோ ரேஷன் வழங்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கினார் என்றார்.
நரேந்திர மோடியை பிரதமராக்குங்கள்
நரேந்திர மோடியை பிரதமராக்குவது என்பது ஏழைகளின் நலன் மற்றும் பழங்குடியினரின் மரியாதை மீட்டெடுப்பது என்று ஷா கூறினார். காங்கிரஸ் நாடாளுமன்றத்திலும் இல்லை, இங்கும் இல்லை.. அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. கோர்பாவை மேம்படுத்தும் பொறுப்பை மோடியிடம் விட்டுவிடுங்கள் என்றார்.
பெரும்பான்மை இருந்தும் இடஒதுக்கீட்டை நீக்கவில்லை
பொய் சொல்வதே காங்கிரஸ் கட்சியின் தலைவிதியாகிவிட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். போலியான வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்படுகிறது. பெரும்பான்மை இருந்தும் இட ஒதுக்கீட்டை நீக்கவில்லை. ஆனால் ராமர் கோயில் கட்டுவதற்கும், சட்டப்பிரிவு 370ஐ நீக்குவதற்கும், பணமதிப்பிழப்பு மற்றும் முத்தலாக் தடை சட்டம் போன்ற விசியங்களுக்கு பெரும்பான்மை பயன்படுத்தினோம்.
மேலும் படிக்க - 'என் தந்தையை துண்டு துண்டாக வீட்டுக்கு எடுத்து வந்தேன்' - பிரியங்கா காந்தி உருக்கம்
माननीय केंद्रीय गृह एवं सहकारिता मंत्री श्री @AmitShah जी की विशाल जनसभा (मेला ग्राउण्ड, कटघोरा, कोरबा लोकसभा)#छत्तीसगढ़_मांगे_भाजपा https://t.co/OJ2fVv97oS
— BJP Chhattisgarh (@BJP4CGState) May 1, 2024
பழங்குடியினரைக் கௌரவித்தவர் மோடி
எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட பிற இடஒதுக்கீடுகளை நாங்கள் நீக்க மாட்டோம். ஆனால் அவற்றை நீக்க காங்கிரஸையும் அனுமதிக்க மாட்டோம் என்று அமித் ஷா கூறினார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பழங்குடியினருக்காக உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. மோடி அவர்கள் பிர்சா முண்டாவின் பிறந்த நாளைக் கொண்டாடி பழங்குடியின சமூகத்தை கௌரவித்தார். பழங்குடியின சகோதரி திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவராக்கி பழங்குடியினரைக் கௌரவித்தார் மோடி என அமித் ஷா கூறினார்.
கார்கே ஏன் பொய் சொல்கிறார்? அமித் ஷா
மோடி வந்தால் ஏழைகள் பாதிக்கப்படுவார்கள் என்கிறார் கார்கே. ஒரு குடும்பத்திற்காக கார்கே ஏன் பொய் சொல்கிறார் என்று அமித் ஷா கூறினார்.
25 கோடி ஏழை மக்களை வறுமைக் கோட்டிலிருந்து வெளியே கொண்டு வந்ததில் பலன் உண்டா இல்லையா. 12 கோடி கழிப்பறைகள் பலனளிக்குமா இல்லையா? 14 கோடிக்கு தண்ணீர் குழாய் அமைக்கப்பட்டது, அவர்களுக்கு ஏதாவது பலன் கிடைத்ததா இல்லையா? சுகாதார நலன்களுக்காக 60 கோடி மக்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்டது. இது நன்மையா இல்லையா? என சத்தீஸ்கர் மாநில கோர்பாவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் அடுக்கடுக்கா கேள்விகளை எழுப்பினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ