ஆர்.எஸ்.எஸ். அமைப்பை குறித்து விமர்சித்த காங்கிரஸ் துணை தலைவர் ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் நெருக்கடி கொடுத்துள்ளது.
சமீபத்தில் ராகுல்காந்தி அவர்கள் ஆர்.எஸ்.எஸ். குறித்து விமர்சனம் செய்திருந்தார். அதாவது மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற ஆர்.எஸ்.எஸ் காரர்கள் என்று விமர்சித்திருந்தார். இது தொடர்பாக அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இன்று இந்த வழக்கு தொடர்பான மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராகுல் இதற்காக ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் மன்னிப்பு கேட்கலாம். அல்லது முறைப்படி வழக்கை சந்திக்க வேண்டும் என்றும், இந்த வழக்கு சாராம்சத்தின் அடிப்படையில் முடிவு செய்யப்பட வேண்டும். இது குறித்து வரும் 27-ம் தேதிக்குள் ராகுல்காந்தி பதில் மனு தாக்கல் ய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.