ரஃபேல் விவகாரம்: நாட்டின் பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியம் -நிர்மலா சீதாராமன்

நாட்டின் பாதுகாப்பு குறித்து காங்கிரஸ் கட்சிக்கு கவலையில்லை. ஆனால் எங்களுக்கு நாட்டின் பாதுகாப்பு தான் முக்கியம் என பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 4, 2019, 05:24 PM IST
ரஃபேல் விவகாரம்: நாட்டின் பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியம் -நிர்மலா சீதாராமன் title=

டெல்லி: நாட்டின் பாதுகாப்பு குறித்து காங்கிரஸ் கட்சிக்கு கவலையில்லை. ஆனால் எங்களுக்கு நாட்டின் பாதுகாப்பு தான் முக்கியம் என பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

‘ரபேல்’ போர் விமானங்களை வாங்கியதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அதுக்குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க அஞ்சுகிறார். ரபேல் ஒப்பந்தத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஏன்? நாடாளுமன்றத்தில் கேள்விகளை எதிர்கொள்ளத் தயங்குகின்றனர் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். 

மேலும் தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், இரு அவைகளிலும் ரஃபேல் விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்தி உள்ளது. ரபேல் விவகாரம் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற குழு அமைக்க வேண்டும் என அமளியில் எதிர்கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், ரபேல் குறித்து ராகுல் காந்தியின் கேள்விக்கு பதிலளித்து பேசிய நாட்டின் பாதுகாப்பு மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது: ரபேல் விவகரம் குறித்து தொடர்ந்து பொய்களை கூறி வருகிறது காங்கிரஸ். எந்த அடிப்படையில் காங்கிரஸ் ரபேல் ஒப்பந்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறுகிறது. ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? எனவும் கேள்வி எழுப்பினார்.

நாட்டின் பாதுகாப்பு விசியத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அக்கறை இல்லை. அப்படி அக்கறை இருந்தால், கடந்த 8 ஆண்டுகளாக வெறும் ஒப்பந்தம் செய்ய மட்டுமே நேரத்தை வீணடித்து இருக்காது. எப்போதும் நாட்டின் பாதுகாப்புடன் விளையாடுவதே காங்கிஸின் வேலை எனவும் அவர் குற்றம்சாட்டினார். 

ஆனால் எங்களுக்கு நாட்டின் பாதுகாப்பு தான் முக்கியம். அதற்கு தான் நாங்கள் முன்னுரிமை அளிப்போம். நாட்டின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவது நமது கடமை. அதன் தேவையும் தற்போது உள்ளது. 

இந்த வருடம் செப்டம்பரில் நாட்டில் முதல் ரபேல் விமானம் தரையிறங்கும். அதன்மூலம் நாட்டின் பாதுகாப்பு பலமடங்கு உயரும். நாட்டின் பாதுகாப்பு கருதி ரபேல் ஒப்பந்ததின் மதிப்பு குறித்து வெளியே சொல்லமுடியாது. அது ரகசியமானது எனவும் அவர் கூறினார்.

Trending News