அனைத்து கட்சி கூட்டத்தில் ஓங்கி ஒலித்த டெல்லி மாசு குரல்...

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக சனிக்கிழமை புதுடெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் டெல்லி காற்று மாசுபாடு குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.

Last Updated : Nov 16, 2019, 08:29 PM IST
அனைத்து கட்சி கூட்டத்தில் ஓங்கி ஒலித்த டெல்லி மாசு குரல்... title=

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக சனிக்கிழமை புதுடெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் டெல்லி காற்று மாசுபாடு குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.

இந்த கூட்டத்திற்கு சபா சபாநாயகர் ஓம் பிர்லா தலைமை தாங்கினார். பிரதமர் நரேந்திர மோடியும் மக்களவையில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடன் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்றார். சிவசேனா தலைவர் விநாயக் ரவுத் மற்றும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஒவைசி ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் கடுமையான காற்று மாசுபாடு தற்போது மத்திய மற்றும் மாநில அரசு தொடர்பான மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாகும்.

டெல்லியில் மாசு அளவு கடந்த சில வாரங்களாக பெரும்பாலும் 'கடுமையான' பிரிவில் உள்ளது. தேசிய தலைநகரில் வெள்ளிக்கிழமை காற்றின் தரக் குறியீடு (AQI) 482-ஆக பதிவாகியுள்ளது, இது 'கடுமையான' பிரிவின் கீழ் PM10 504 மற்றும் PM2.5 - 332 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.

என்றபோதிலும், சனிக்கிழமையன்று காற்றின் தரத்தில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டது.

டெல்லியில் நிலவும் நச்சு காற்று மாசுபாடு காரணமாக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நவம்பர் 4 முதல் 15 வரை ஒற்றைப்படை திட்டத்தை செயல்படுத்துவதாக அறிவித்தார். இந்த திட்டம் வெள்ளிக்கிழமை முடிவடைந்த நிலையில், தொடர் மாசு காரணமாக இன்னும் சில நாட்களுக்கு இந்த திட்டத்தை செயல்படுத்தலாம் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இருப்பினும், இத்திடத்தை புதுப்பிப்பதற்கான முடிவு திங்களன்று எடுக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி முழுவதும் காற்று சுத்திகரிப்பு கோபுரங்களை நிறுவுவதன் மூலம் கொடிய மாசுபாட்டை சமாளிக்க முடியும் என கருதி, சாலை வரைபடத்தை தயார் செய்யுமாறு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேட்டுக் கொண்டது மற்றும் காற்று மாசுபாடு அதிகரித்து வருவது தொடர்பாக கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசாங்கத்தை சாடியது. 

மேலும் உச்சநீதிமன்றம் தெரிவிக்கையில்., "டெல்லி மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது. ஒற்றை-சமமான திட்டம் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான தீர்வாக இருக்காத பட்சத்தில் அரசு உரிய மாற்று திட்டத்தினை செயல்படுத்த வேண்டும்" என குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், நாடாளுமன்றத்தின் குளிர்கால அமர்வு திங்கள் (நவம்பர் 18) முதல் டிசம்பர் 13 வரை நடைப்பெறவுள்ளது. நடைபெற இருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் டெல்லி மாசுபாடு குறித்த விவாதங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News