களிந்தி குஞ்ச்: புதுடெல்லி களிந்தி குஞ்ச் பகுதியில் இன்று காலை சோதனைக்காக விடப்பட்ட மெட்ரோ ரெயில், டிப்போ சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவம் மெட்ரோவின் புதிய மஜெண்டா வரிசையில் நடந்ததுள்ளது.
Person who took charge of train from the maintenance staff also did not check brake and proceeded with the train up to the washing plant built on a ramp. While stopping at the ramp, since the brakes were not available, the train rolled back causing this incident: Delhi Metro
— ANI (@ANI) December 19, 2017
நொய்டாவில் உள்ள பொட்டானிக்கல் கார்டனில் இருந்து இந்த புதிய மெட்ரோ வரியை, பிரதமர் மோடி அடுத்த வாரம் திறந்து வைக்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய மெட்ரோ வரிசையானது, போட்டானிக்கல் கார்டன் மற்றும் கல்காஜ் இடையேயான பிரயாண நேரத்தினை 52 நிமிடங்களிலிருந்து 19 நிமிடங்களுக்கு குறைக்கும் வகையினில் திட்டமிடப்பட்டது.
வரும் டிசம்பர் 25-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இந்த மெட்ரோ சேவையை திறந்து வைப்பார் எனவும். அதன் பின்னர் வர்த்தக நடவடிக்கைகளுக்கு இது திறக்கப்படும் எனவும் முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது, இந்த மெட்ரோ ரயில் விபத்துகுள்ளாகி இருப்பது, மக்களிடையே பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.