Petrol Diesel Price Today: பெட்ரோலை போல ரூ 100 ஐ தாண்டிய டீசல் விலை

Petrol / Diesel: டீசல் விலையும் ரூ 100 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 14, 2021, 10:35 AM IST
Petrol Diesel Price Today: பெட்ரோலை போல ரூ 100 ஐ தாண்டிய டீசல் விலை title=

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக உள்ளது பெட்ரோல் மற்றும் டீசல். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை, பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது. ஆனால் தற்போது இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி விலைகளை நிர்ணையிக்கின்றன. அதன் விலைகளின் இன்றைய நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம்.

தற்போது பெட்ரோல், டீசல் விலையை (Petrol,Diesel Price) உயர்த்தி வருகின்றன. சில இடங்களில் சதம் அடித்துள்ளது. பல இடங்களில் பெட்ரோல் (Petrol Price), டீசல் விலை (Diesel Price) வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. நேற்று பெட்ரோலுக்கு 27 காசுகளும் டீசலுக்கு 23 காசுகளும் அதிகரித்து இருந்தது. அந்த வகையில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, லடாக் ஆகியவற்றில் ரூ 100-க்கு அதிகமாக பெட்ரோல் விற்கப்படுகிறது. இந்த வரிசையில் 7வது மாநிலமாக கர்நாடகாவும் இணைந்துவிட்டது.

ALSO READ | எத்தனால் கலந்த எரிபொருள் திட்டம் குறித்து பிரதமர் அறிவிப்பு

இதனிடையே ராஜஸ்தானில் டீசல் விலையும் நேற்று ரூ 100- ஐ தொட்டுவிட்டது. இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு அதிக வாட் வரி விதிக்கும் மாநிலங்களில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது. ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகரில்தான் நாட்டிலேயே முதல் முறையாக பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ 100 ஐ தாண்டியது.




City Petrol Diesel
Delhi 96.41 87.28
Mumbai 102.58  94.7
Chennai 97.69 91.92
Kolkata 96.34 90.12

இங்கு பெட்ரோல் விலை சனிக்கிழமை அன்று லிட்டருக்கு ரூ100.06-க்கு விற்பனையானது. மும்பையில் லிட்டர் பெட்ரோல் ரூ 100-ஆக கடந்த 29 ஆம் தேதி உயர்ந்துள்ளது. மெட்ரோ சிட்டிகளில் டீசல் விலையும் லிட்டருக்கு ரூ 94.45 ஆக உயர்ந்துள்ளது.

ஒவ்வொரு நாளும் 6 மணிக்கு விலை மாறுகிறது
தினமும் காலை 6 மணிக்கு பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) விலை மாறுகிறது. புதிய கட்டணங்கள் காலை 6 மணி முதல் பொருந்தும். பெட்ரோல் டீசல் விலையில் கலால் வரி, டீலர் கமிஷன் மற்றும் பிறவற்றைச் சேர்த்த பிறகு, அதன் விலை கிட்டத்தட்ட இரட்டிப்பாகும். பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் ஒவ்வொரு நாளும் மாறுகின்றன, அந்நிய செலாவணி விகிதங்களுடன் சர்வதேச சந்தையில் கச்சா விலை என்ன என்பதைப் பொறுத்து.

இது போன்ற பெட்ரோல் டீசல் விலையை சரிபார்க்கவும்
SMS மூலம் பெட்ரோல் டீசலின் விலையை நீங்கள் அறியலாம். பெட்ரோல் டீசல் விலை தினமும் காலை 6 மணிக்கு புதுப்பிக்கப்படும். இந்தியன் ஆயிலின் வலைத்தளத்தின்படி, நீங்கள் உங்கள் நகரக் குறியீட்டை RSP-யுடன் தட்டச்சு செய்து 9224992249 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். ஒவ்வொரு நகர குறியீடும் வேறுபட்டது. ஐ.ஓ.சி.எல் வலைத்தளத்திலிருந்து இதை நீங்கள் காணலாம். அதே நேரத்தில், உங்கள் நகரத்தில் பெட்ரோல் டீசல் விலையை BPCL வாடிக்கையாளர் RSP 9223112222 மற்றும் HPCLவாடிக்கையாளர் HPPrice-க்கு 9222201122 செய்தியை அனுப்புவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ALSO READ | மின்சார வாகங்களுக்கான மிகப் பெரிய செய்தி: ஊக்கமளிக்கும் உத்வேகத்தில் மத்திய அரசு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News