புதுடெல்லி: டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் உப்பு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக நேற்று இரவு தகவல் வெளியானது. மேலும் உத்தரபிரதேசத்தில் கிலோ 400 ரூபாய் வரையும், டெல்லியில் 250 ரூபாய் வரையும் உப்பு விற்கப்படுவதாகவும் மக்கள் மத்தியில் வதந்திகள் வந்தது.
இது குறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், உப்பு போதிய அளவுக்கு அதிகமாகவே அரசின் கையிருப்பில் இருக்கிறது. உப்பு உற்பத்தி, வினியோகத்தில் எந்தவித தடையும் இல்லை. அதே போல் உப்பு விலையும் ஏறவில்லை. இது போன்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். அந்தந்த மாநில அரசுகள் வதந்தி பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.