பாக்., ட்ரோன் மூலம் இந்தியாவுக்கு வெடிபொருட்களை அனுப்புகிறது: அம்ரிந்தர்சிங்!

ஆளில்லா விமான மூலம் இந்தியாவுக்குள் பாகிஸ்தான் ஆயுதங்கள், வெடிபொருட்களை அனுப்புவதாக பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர்சிங் குற்றம்சாற்றியுள்ளார்!!

Updated: Sep 25, 2019, 10:29 AM IST
பாக்., ட்ரோன் மூலம் இந்தியாவுக்கு வெடிபொருட்களை அனுப்புகிறது: அம்ரிந்தர்சிங்!

ஆளில்லா விமான மூலம் இந்தியாவுக்குள் பாகிஸ்தான் ஆயுதங்கள், வெடிபொருட்களை அனுப்புவதாக பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர்சிங் குற்றம்சாற்றியுள்ளார்!!

பாகிஸ்தானின் ஆளில்லா குட்டி விமானங்கள் இந்திய எல்லைக்குள் ஆயுதங்களுடன் ஊடுருவும் விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காணவேண்டும் என பஞ்சாப் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் பதுங்கியிருந்த காலிஸ்தான் ஜிந்தாபாத் என்ற பயங்கரவாத அமைப்பின் மறைவிடமானது அண்மையில் கண்டறியப்பட்டு ஆயுதங்கள், செல்போன்கள், கையெறி குண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. ஆயுதங்கள், பாகிஸ்தானிலிருந்து ஆளில்லா குட்டி விமானங்கள் வாயிலாக இந்திய எல்லைக்குள் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்துள்ள பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங், ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், இதுபோன்ற செயல்களில் பாகிஸ்தான் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இவ்விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது; 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர், பாகிஸ்தானின் வம்சாவளியைச் சேர்ந்த ட்ரோன்கள் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை பாக்., மோசமான வடிவமைப்புகளில் ஒரு புதிய மற்றும் தீவிரமான பரிமாணமாகும். இந்த ட்ரோன் சிக்கல் விரைவாகக் கையாளப்படுவதை உறுதிசெய்ய @AmitShah ஜி-யை கோருங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.