Economic Survey: 2019-20 ஆண்டுகளில் உள்நாட்டு உற்பத்தி 7%-மாக இருக்கும்!

மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் 2018-19 பொருளாதார ஆய்வை தாக்கல் செய்தார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Mukesh M | Last Updated : Jul 4, 2019, 08:05 PM IST
Economic Survey: 2019-20 ஆண்டுகளில் உள்நாட்டு உற்பத்தி 7%-மாக இருக்கும்! title=

மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் 2018-19 பொருளாதார ஆய்வை தாக்கல் செய்தார். 

இது கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் 6.8% -மாக கணிக்கப்பட்ட வளர்ச்சி விகிதம் 2019-20-ஆம் ஆண்டில் 7%-மாக வளர்ச்சியடையும் என்று தெரிவித்துள்ளது. இது வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரத்தை பராமரிக்கும் என்றும் கணித்துள்ளது.

பொருளாதார கணக்கெடுப்பு 2018-19 ஆனது வரும் 2025-ஆம் ஆண்டளவில் இந்தியா ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற ஒரு ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ளும் எனவும் குறிப்பிட்டுள்ளது. 

இந்த கனவு நனவாகிவிட்டால் சீனாவை விட உலகின் மிக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நிலையை இந்திய பெற முடியும். கடந்த 5 ஆண்டுகளின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 7.5 சதவீதமாக உள்ளது. இந்த பொருளாதார ஆய்வு தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தயாரித்துள்ளார்.

---பொருளாதார ஆய்வு அறிக்கையில் இருந்து சில முக்கிய தகவல்கள்---

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி திட்டம் 2018-19 ஆம் ஆண்டில் வளர்ச்சி வேகத்தில் சரிவை சந்தித்தது. முந்தைய சில ஆண்டுகளில் தொடங்கப்பட்ட கட்டமைப்பு சீர்சிருத்தங்கள் தொடர்ந்து நடைப்பெற்று கொண்டிருக்கும் வேளையில், பொருளாதார நிலைமைகள் தொடர்ந்து நிலையானதாக இருப்பதால் 2019-20-ஆம் ஆண்டில் வளர்ச்சி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் எதிர்மறையான அபாயங்கள் மற்றும் தலைகீழ் வாய்ப்புகள் இவையாவும் 2018-19 இல் தொடர்கின்றன. பொருளாதார ஆய்வு 2019-20 தெரிவிக்கிறது.  பொருளாதார வளர்ச்சி பாதையை தீர்மானிப்பதில் நுகர்வு செயல்திறன் மிக முக்கியமானதாக அமையும்.

கடந்த 2018-ஆம் ஆண்டில் கிராமப்புற ஊதிய வளர்ச்சி வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் கிராப்புற ஊதிய வளர்ச்சி, தேவையை சமாளிக்கும் விதமாக கட்டமைக்கப்படுகிறது.

2011-12 ஆம் ஆண்டிலிருந்து குறைந்து வரும் முதலீட்டு வீதம் 2019 -20 ஆண்டில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நிதி அமைச்சகத்தின் முதன்மை ஆவணமாக பொருளாதார ஆய்வு  பொருளாதாரத்தின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய விரிவான புள்ளி விவர தரவை வழங்குகிறது.

2018-19 நிதியாண்டில் நிதி ஒருங்கிணைப்பிற்கான பாதையில் நிதிப் பற்றாக்குறை 2018-19 இல் 5.8%-மாக எதிர்பார்க்க படுகிறது.  இது 2017-18 ஆம் ஆண்டில் 6.4%-மாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார கணக்கெடுப்பு 2018-19 வெளியீடு நாடாளுமன்றத்தில் பட்ஜெட் வெளியிடுவதற்கான  முன்னதாக  வருகிறது. பொதுவாக ஒரு பொருளாதார ஆய்வு மத்திய பட்ஜெட்டுகான கொள்கை முன்னோட்டத்தை வழங்கும்.

ஜனவரி - மார்ச் வரையான காலாண்டில் வளர்ச்சி விகிதம் 5.8%-மாக சரிந்தது. இது கடந்த 20 காலாண்டுகளில் மிக குறைந்த வளர்ச்சி விகிதம் கண்ட காலாண்டாகும். நிதியியல் ஆண்டு முடிவில் 6.8% குறைவாக இருந்தது. தொழில் துறை உற்பத்தி வீழ்ச்சி மற்றும் ஆட்டோ மொபைல் விற்பனை போன்ற சந்தையின் மந்தநிலையினை வெளிப்படுத்தியுள்ளன.

Trending News