ICICI முன்னாள் மேலாண் சந்தா கோச்சார் வீடு, அலுவலகங்களில் ED சோதனை....

ICICI முன்னாள் மேலாண் இயக்குனர் சந்தா கோச்சார் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை....

Last Updated : Mar 1, 2019, 02:32 PM IST
ICICI முன்னாள் மேலாண் சந்தா கோச்சார் வீடு, அலுவலகங்களில் ED சோதனை.... title=

ICICI முன்னாள் மேலாண் இயக்குனர் சந்தா கோச்சார் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை....

ICICI முன்னாள் மேலாண் இயக்குனர் சந்தா கோச்சார்(Chanda Kochhar) மற்றும் வீடியோகான் தலைவர் வேணுகோபால் தூத் (Venugopal Dhoot) ஆகியோரின் வீடுகள் உட்பட பல்வேறு இடங்களில், அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

முன்னதாக கடந்த 2012-ம் ஆண்டு 20 வங்கிகளின் கூட்டமைப்பு இணைந்து வீடியோகான் குழுமத்திற்கு ரூ.40,000 கோடி கடன் வழங்கிருந்ததாகவும், இதில் ஒரு வங்கியான ICICI வீடியோகான் குழுமத்திற்கு ரூ.3,250 கோடியை அளித்ததகாவும் தெரிவிக்கப்பட்டது. ICICI வங்கியிடம் இருந்து கடன் பெற்ற 6 மாதத்துக்குப் பின்னர் இந்த நிறுவனத்தின் உரிமையினை ரூ.9 லட்சத்துக்கு தீபக் கொச்சாரின் அறக்கட்டளை ஒன்றுக்கு வேணுகோபால் தூத் கொடுத்துள்ளார். ICICI-யிடம் கடன் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பது தகவல்கள் வெளியே வந்தது.

பின்னர் இதுக்குறித்து விசாரிக்க ICICI வங்கி சார்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. விசாரணைக் குழு பின்னர் கடந்த அண்டு சந்தா கோச்சார் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.

ICICI வங்கியின் மேலாண் இயக்குனராக சந்தா கோச்சார் இருந்தபோது, வீடியோ கான் குழுமத்திற்கு, சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் கடன் வழங்கியுள்ளார். இவ்வாறு வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் வழங்கிய சந்தா கோச்சார், தனது கணவர் தீபக் கோச்சார் நிறுவனத்தின் மூலம் ஆதாயம் அடைந்துள்ளார் எனக் கூறி, சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கின் அடிப்படையில், மும்பையில் உள்ள, சந்தா கோச்சார், வீடியோகான் குழும தலைவர் வேணுகோபால் தூத் உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

Trending News