சட்ட நடைமுறைகள் முடிந்த பிறகே ராமர் கோவிலுக்கு அவசர சட்டம்!

சட்ட நடைமுறைகள் முடிந்த பின்னரே ராமர் கோவிலுக்கு அவசர சட்டம் கொண்டு வருவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்!

Last Updated : Jan 1, 2019, 06:53 PM IST
சட்ட நடைமுறைகள் முடிந்த பிறகே ராமர் கோவிலுக்கு அவசர சட்டம்! title=

சட்ட நடைமுறைகள் முடிந்த பின்னரே ராமர் கோவிலுக்கு அவசர சட்டம் கொண்டு வருவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்!

புதுடெல்லியில் இன்று ANI செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி, ராமர் கோவில் விவகாரம், முத்தலாக், துல்லிய தாக்குதல், 2019-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் காந்தி குடும்பம் போன்ற பல விவகாரங்கள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

ராமர் கோவில் விவகாரம்; 

ராமர் கோவில் விவகாரத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளை காங்கிரஸ் தாமதப்படுத்துகிறது. சட்ட நடைமுறைகள் முடிந்த பிறகே, ராமர் கோவிலுக்கு அவசர சட்டம் கொண்டுவருவது குறித்து பரிசீலனை செய்யப்படும்.

சட்ட ரீதியாகவே இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்பதால் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை பாஜக அரசு எரிர்பார்த்துள்ளது என தெரிவித்தார்.

காந்தி குடும்பம்;

நான்கு தலைமுறைகளாக நாட்டை ஆண்ட குடும்பம், ஆனால் நாட்டு மக்களின் நலனில் அக்கறை அற்ற குடும்பம். வரும் பாராளுமன்ற தேர்தல் சாமானியருக்கான தேர்தலாகவே இருக்கும். சாமானியர்களின் நலனை கருத்தில் கொண்ட கட்சிகளுக்கே ஆதரவு கிடைக்கும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது.

அந்த வகையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சாமானியர் மற்றும் மெகா கூட்டணி இடையே தான் போட்டி நிலவும். நான் சாமானியரின் பிரதிபலிப்பு தான்.

துல்லிய தாக்குதல்.

பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது இந்தியா நடத்திய துல்லிய தாக்குதல் (சர்ஜிகல் ஸ்டிரைக்) துணிச்சலான நடவடிக்கை. இந்த துல்லிய தாக்குதல் நடத்திய வீரர்கள் குறித்து கவலை கொண்டிருந்தேன். அவர்களில் எந்த ஒரு வீரரும் உயிரிழக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

முத்தலாக் விவகாரம்.

முத்தலாக் என்பது பாலினத்திற்கான சமத்துவம் கொண்டு வரும் முயற்சி, சபரிமலை விவகாரத்தில் பெண்கள் உள்நுழைய வேண்டும் என்பது பாரம்பரியம் தொடர்பான விவகாரம் என தெரிவித்த மோடி அவர்கள், முத்தலாக் மற்றும் சபரிமலை பெண்கள் நுழைவு விவகாரம் தொடர்பாக பாஜக-வின் நிலைபாடு குறித்து விளக்கினார்.

மேலும் சபரிமலை விவகாரத்தினையும் முத்தலாக் விவகாரத்தினையும் ஒன்றாக பார்க்க இயலாது, சமூகத்தில் பெண்களுக்கான சமத்துவ உரிமையினை, ஒரு மதத்தின் பாரம்பரியத்தின் கொள்கைகளோடு ஒப்பிட்டு பார்க்க கூடாது என தெரிவித்தார். சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பினையும், குறிப்பாக அனைத்து நீதிபதிகளின் தீர்ப்பினையும் மக்கள் புரிந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உர்ஜித் படேல் பதவி விலகல்.,

ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேல் பதவி விலகல் தொடர்பாக பதில் அளித்த அவர்., அரசியல் நிர்பந்தங்களார் உர்ஜித் பட்டேல் பதவி விலகவில்லை எனவும், தனது சொந்த விருப்பத்திற்காகவே அவர் பதவி விலகியதாகவும் தெளிவு படுத்தியுள்ளார். கடந்த 6 மாதங்களாகவே உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்ய விரும்பியதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

பணமதிப்பிழப்பு:

₹1000 மற்றும் ₹500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது நகைச்சுவையான விஷயம் அல்ல. இந்த திட்டத்தில் பல முக்கிய முடிவுகள் உள்ளடங்கியுள்ளது. கருப்பு பணத்தினை அழிக்க பெரிதும் உதவியது இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை தான்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் ஒரு சிலர் மட்டுமே கருப்பு பணத்தை தாமாக முன்வந்து திரும்ப அளித்தனர். நாட்டை நான்கு தலைமுறைகளாக ஆட்சி செய்து வந்தவர்கள் பல நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர் என சூசகமாக காங்கிரஸ் கட்சியினை குற்றம் சாட்டினார்.

Trending News