ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை தயாராகும் மத்திய அரசு; எதிர்க்கும் தொழிற்சங்கம்

பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட OSH Code ஒரு நாளில் அதிகபட்சம் எட்டு மணி நேரம் தான் வேலை எனக்கூறப்பட்டுள்ள நிலையில், தற்போதைய தொழிலாளர் அமைச்சகத்தின் முடிவு முற்றிலும் வேறுபட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 21, 2020, 05:49 PM IST
  • ஒரு நாளில் அதிகபட்சமாக 12 மணி நேரம் வேலை நேரத்தை உயர்த்த தொழிலாளர் அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.
  • கூடுதல் நேர வேலை பார்ப்பதன் மூலம் தொழிலாளர்கள் அதிக வருமானம் ஈட்ட முடியும்.
  • ஆறு நாட்கள், ஒவ்வொரு நாளும் எட்டு மணிநேரம் மற்றும் ஒரு வார விடுமுறை
ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை தயாராகும் மத்திய அரசு; எதிர்க்கும் தொழிற்சங்கம் title=

புது டெல்லி: தொழிலாளர் அமைச்சகம் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பதை அனுமதிக்கும் வரைவை மத்திய அரசு கொண்டு வர முயற்சி செய்கிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் (Occupational Safety, Health and Working Conditions) கோட் 2020 குறித்த வரைவு விதிகளின் கீழ் ஒரு நாளில் அதிகபட்சமாக 12 மணி நேரம் வேலை நேரத்தை உயர்த்த தொழிலாளர் அமைச்சகம்  (Labour Ministry) முன்மொழிந்துள்ளது.

இருப்பினும், 2020 நவம்பர் 19 அன்று அறிவிக்கப்பட்ட வரைவு விதிகளின் கீழ் வாராந்திர வேலை நேர வரம்பு 48 மணிநேரமாக, அதாவது ஆறு நாட்கள், ஒவ்வொரு நாளும் எட்டு மணிநேரம் மற்றும் ஒரு வார விடுமுறை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட OSH Code ஒரு நாளில் அதிகபட்சம் எட்டு மணி நேரம் தான் வேலை எனக்கூறப்பட்டுள்ள நிலையில், தற்போதைய தொழிலாளர் அமைச்சகத்தின் முடிவு முற்றிலும் வேறுபட்டுள்ளது. 

ALSO READ |  இனி வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும்!!

"நாடு முழுவதும் கடுமையான காலநிலை நிலைமைகளை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, கூடுதல் நேர வேலை பார்ப்பதன் மூலம் தொழிலாளர்கள் அதிக வருமானம் ஈட்ட முடியும்" என்று தொழிலாளர் அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் பி.டி.ஐ. செய்தி ஊடகத்திடம் தெரிவித்தார்.

மேலும் கூறிய அந்த அதிகாரி, "எட்டு மணி நேரத்திற்கு மேல் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கூடுதல் வருமானம் கிடைக்கும் வகையில் நாங்கள் வரைவு விதிகளில் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளோம்" என்றார்.

ஓஎஸ்ஹெச் குறியீட்டின் வரைவு விதிகளின்படி, எந்தவொரு நாளிலும் 8 மணி நேரத்திற்கு அதிகமாக பணி செய்தால், அதாவது ஒருவர் 15-30 நிமிடங்களுக்கு இடையில் வேலை பார்த்தால், அது 30 நிமிடங்களாக கணக்கிடப்படும்.

ALSO READ |  மூடப்பட்ட நிறுவனத்தில் உங்கள் PF சிக்கியுள்ளதா? எவ்வாறு பெறுவது இங்கே படிக்கவும்

தற்போது, ​​தற்போதுள்ள சட்டத்தின் படி 30 நிமிடங்களுக்கும் குறைவாக வேலை பார்த்தால், அது ஓவர்டைம் கணக்கில் வருவதில்லை. 

வரைவு விதிகள் என்ன கூறுகின்றன?
எந்தவொரு தொழிலாளியும் எந்தவொரு வாரத்திலும் 48 மணி நேரத்திற்கு மேல் ஒரு நிறுவனத்தில் வேலை செய்யவோ அல்லது அனுமதிக்கவோ கூடாது. ஒரு தொழிலாளியின் வேலை காலம் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும், அவரின் இடைவெளிகளை ஓய்வுக்காக உள்ளடக்கியது. அதன் அடிப்படையில் ஒரு நாளில் பன்னிரண்டு மணி நேரத்திற்கு மேல் வேலைவேண்டியது இருக்காது. 

பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஓஎஸ்ஹெச் கோட் கூறுவது என்ன? 
எந்தவொரு நிறுவனத்திலும் ஒரு நாளில் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக எந்தவொரு தொழிலாளியும் வேலை செய்யத் தேவையில்லை அல்லது வேலை செய்ய அனுமதிக்கப்படமாட்டாது மற்றும் ஒவ்வொரு நாளும் வேலை செய்யும் காலம் எட்டு மணிநேரங்களை தாண்டக்கூடாது.

ALSO READ |  EPFO Whatsapp சேவையை பயன்படுத்தி உங்கள் EPF தொடர்பான அனைத்து தகவல்களையும் பெறுங்கள்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News