வசூல் ராஜா MBBS பாணியில்... நண்பருக்காக தேர்வு எழுதி மாட்டிக் கொண்ட நபர்..!

Exam Malpractices: தேர்வு எழுதும் போது பிட் அடித்து காப்பி செய்த காலம் எல்லாம் போய்விட்டது. இப்போது ஆள் மாறாட்டம் மூலம் காப்பி அடிக்கும் சம்பவங்கள் குறித்து அடிக்கடி கேள்விப்படுகிறோம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 23, 2024, 06:01 PM IST
வசூல் ராஜா MBBS பாணியில்... நண்பருக்காக தேர்வு எழுதி மாட்டிக் கொண்ட நபர்..! title=

தேர்வு எழுதும் போது பிட் அடித்து காப்பி செய்த காலம் எல்லாம் போய்விட்டது. இப்போது ஆள் மாறாட்டம் மூலம் காப்பி அடிக்கும் சம்பவங்கள் குறித்து அடிக்கடி கேள்விப்படுகிறோம். உலக நாயகன் கமல் நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் உங்கள் அனைவருக்கும் நிச்சயம் ஞாபகம் இருக்கும். மருத்துவ படிப்பு படிக்க விரும்பும் கமலஹாசன், நுழைவு தேர்வில் தனக்கு பதிலாக மருத்துவர் ஒருவரை அனுப்பி, தேர்வு எழுதி கல்லூரியில் சீட் வாங்கி இருப்பார். அதேபோன்று மத்திய பிரதேசத்தில், குவாரியரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதில் ஒரு இளைஞர், தனது நண்பருக்கு உதவுவதற்காக, அவருக்கு பதிலாக, தான் தேர்வு மையத்திற்கு சென்று தேர்வு எழுதியுள்ளார்.

குவாலியரில் நடந்த சம்பவம்

மத்திய பிரதேசம் குவாலியிரில் இள்ள தேர்வு மையம் ஒன்றுக்கு விசிட் செய்த தேர்வு கண்காணிப்பு குழுவினருக்கு, ஆதித்ய பர்மர் என்ற பெயரில் தேர்வு எழுதிய மாணவரை கண்டு சந்தேகம் ஏற்பட்டது. அந்த மாணவரிடம் அவர்கள் விசாரணை மேற்கொண்ட போது, தனது பெயர் ஆதித்யா என தெரிவித்தார். ஆனால் புகைப்படத்துடன் ஒப்பிட்டு பார்த்தபோது, அவரது மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.

அசல் நகல் இரு மாணவர்கள் மீதும் வழக்குப்பதிவு

தேர்வு கண்காணிப்பு குழுவினர் நடத்திய விசாரணைக்கு பிறகு, அசல் நகல் ஆகிய இரு மாணவர்கள் மீதும் போலீசா கைது செய்து, வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணை நடத்தி வரும் போலீசார், பிடிபட்ட மாணவர் தனது நண்பருக்கு பதிலாக தேர்வுக்கு வந்தது ஏன் என்ற காரணத்தையும் கேட்டனர்.

நண்பருக்காக தேர்வு எழுத வந்த மாணவர் கூறிய காரணம்.

ஆள் மாற்றாட்டத்திற்கு உதவிய நபர், தனது நண்பன் ஆதித்யாவிற்கு பதிலாக தேர்வு எழுத வந்த சஞ்சய் பால் எனற இளைஞர். தன் நண்பருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் தேர்வு எழுத வந்ததாக குறிப்பிட்டுள்ளார். இது வரை நான்கு தேர்வுகள் நடந்த நிலையில், ஐந்தாவது தேர்வின் போது பாதிக்கப்பட்ட தன் நண்பருக்கு உதவும் வகையில், தான் தேர்வு எழுத வந்ததாக சஞ்சய் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க - India Alliance: டெல்லியில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே தொகுதி உடன்பாடு

குற்றம் சாட்டப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்தும் போலீசார்

ஆதித்யா, சஞ்சய் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார், ஒருவருக்காக மற்றவர் தேர்வு எழுத வருவது குறித்தும், இந்த நெட்வொர்க்கில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

உத்திரபிரதேசத்தில் நடந்த சம்பவம்

உத்திர பிரதேசத்திலும், பத்தாவது மற்றும் 12 வது பொது தேர்வுகளில் இதே போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. நான்கு மாணவர்களுக்கு பதிலாக, போலி ஆதார் அட்டைகளை பயன்படுத்தி, ஹிந்தி மொழி தேர்வின் போது, ஆள் மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. தேர்வு கண்காணிப்பு குழுவினர் நடத்திய விசாரணையின் போது, தங்களுக்கு பதிலாக வேறொரு வயரை தேர்வு எழுத அனுப்பிவிட்டு, தேர்வு மையத்திற்கு வெளியே, தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள் காத்துக் கொண்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

தேர்வு மோசடிகளை தடுக்க கடும் நடவடிக்கை

தேர்வுகளில் நடக்கும் முறைகேடு, கேள்வித்தாள்கள் கசிவு போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாநில கல்வி வாரியம், கடுமையான ஏற்பாடுகளை செய்து வருகிறது. எனினும் தேர்வில் நடக்கும் மோசடிகள், காப்பியடிக்கும் சம்பவங்கள், ஆள்மாராட்டங்கள் போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டு இருக்கின்றன.

மேலும் படிக்க - அடித்து சொல்கிறேன் எங்கள் கூட்டணி வெற்றி பெறும் - கார்த்திக் சிதம்பரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News