ஆதார் எண் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள மத்திய அரசு திட்டம்

ஆதார் எண் மூலம் கைரேகையை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது மத்திய அரசு.

Last Updated : Dec 2, 2016, 01:25 PM IST
ஆதார் எண் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள மத்திய அரசு திட்டம் title=

புதுடெல்லி: ஆதார் எண் மூலம் கைரேகையை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது மத்திய அரசு.

டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகள், இன்டர்நெட் பேங்கிங் சேவைகள், மொபைல் பேங்கிங் உள்ளிட்ட பணப்பரிமாற்றத்திற்கு பின் நம்பர் மற்றும் பாஸ்வேர்டுகளை பயன்படுத்தி மக்கள் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சேவைகளுக்கு மாற்றாக ஆதார் எண் மூலமாக கைரேகையை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள மத்திய அரசு தீவிரமாக காட்டி வருகிறது.

பின் நம்பர், பாஸ்வேர்டு இல்லாமல் அவர்களின் ஆதார் எண்ணுடன் சம்பந்தப்பட்ட பயோமெட்ரிக் முறையிலான கைரேகையை பதிவு செய்து பணப்பரிமாற்ற முறையை செயல்படுத்தவும், இதற்காக பொதுவான மொபைல் ஆப் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது மத்திய அரசு.

ஆதார் அடிப்படையிலான பணப்பரிவர்த்தனை 1.31 கோடி ரூபாய் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் எண்ணிக்கையை நாள்தோறும் 40 கோடியாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமை செயலதிகாரி அஜய் பூஷன் பாண்டே கூறியுள்ளார்.

மேலும், பணமாற்ற  ஊக்குவிக்க உதவும் வகையில் கைரேகை அல்லது கண் விழியை அடையாளம் காணக்கூடிய மொபைல் போன்களை உருவாக்க கேட்டுக்கொண்டுள்ளோம் என நிடி ஆயோக் தலைமை செயல் அலுவலர் அமிதாப் காந்த் தெரிவித்தார்.

Trending News