கணவன் மனைவிக்கு இடையில் அப்படி ஒரு சண்டை... காரணம் கணவனின் காதலியா!!

ஆந்திராவில் கணவரின் திருமணத்தை மீறிய உறவை மீடியாவுடன் சென்று கையும் களவுமாக பிடித்த பெண்ணின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. என்ன தான் சிக்கல்? கணவன் - மனைவிக்குள் ஏன் இவ்வளவு அடிதடி?

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Jun 2, 2024, 10:26 AM IST
  • காதலியுடன் கணவர்.
  • மீடியாவை அழைத்துக்கொண்டு வந்த மனைவி.
  • கடுமையாக சண்டையிட்ட கணவன் மனைவி.
கணவன் மனைவிக்கு இடையில் அப்படி ஒரு சண்டை... காரணம் கணவனின் காதலியா!! title=

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் தான் நக்‌ஷத்ரா - தேஜா ஜோடி. மிஸ் vizag ஆக பட்டம் பெற்ற இவர், நடிகரான தேஜாவை 2017-ம்  ஆண்டு  காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ள நிலையில், திருமண வாழ்க்கை சுமூகமாக இல்லாமல் இருந்துள்ளது. இதனால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். 

இந்த நிலையில் நக்‌ஷத்ராவை விவாகரத்து செய்யாமல் வேறொரு பெண்ணுடன் தேஜ் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட நக்‌ஷத்ரா, மீடியாவை அழைத்துக்கொண்டு இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த வீட்டிற்கு சென்று அவர்களை கையும் களவுமாக பிடித்துள்ளார். இதனால் டென்ஷன் ஆன தேஜ் நக்‌ஷத்ராவை அடித்துள்ளார். அதேபோல எனக்கு துரோகம் செய்துவிட்டாயே என நக்‌ஷத்ராவும் தனது கணவரை பளார் பளார் என கன்னத்தில் விளாசினார். இதனால் அந்த இடமே ரணகளமாக மாறியது. 

மேலும் படிக்க | ‘கருடன்’ படம் பார்க்க அனுமதிக்கப்படாத நரிக்குறவர்கள்! வட்டாட்சியர் செய்த செயல்..

இந்த சம்பவத்தை அடுத்து கணவன் - மனைவி, கணவனின் புதிய காதலி என மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் பழிசுமத்தி உள்ளனர். ஆனால் தேஜ் கடைசியாக தான் நடிகர் என்பதால், இளம்பெண்ணுடன் படம் குறித்து அறையில் விவாதித்ததாக  கூறிச்சென்றார். அந்த பெண்ணையும் நக்‌ஷத்ரா தாக்கியுள்ளார். அதோடு தேஜ் மிகவும் மோசமான நபர் என பல குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக கூறியுள்ளார். அதற்கெல்லாம் தேஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். 

இந்த சண்டை குறித்து வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இரு தரப்பும் முடிவெடுத்த பின்னரே வழக்குப்பதிவு செய்யப்படும் என கூறப்படுகிறது. கணவனை வேறொரு பெண்ணுடன் கையும் களவுமாக பிடித்த மனைவி செய்த அலப்பறை வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அதிமுக முகவர்கள் ஆலோசனை கூட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News